பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 154


வம்பளப்போனுக்கும், தகுதியற்றோனுக்கும் அவனுடைய தோற்றம் ஒரு வசையாகும். அதே வேளையில் நன்மை நாடுவோனுக்கு அது ஒரு வலிமை மிக்க பாறையேயாகும்.

விழுப்பமுடைய மனிதன் மதிப்பிற்குரியவனாக இருப்பதன் காரணம் அவன் தன்மதிப்படையவனாக இருக்கின்றான். மேலும், பிறர் அனைவருக்கும் ஏற்ற அளவான மதிப்பைத் தந்து பெருந்தன்மையுடன் நடத்துகின்றான் என்பதுமாகும். தற்பெருமை தன்னையே நேசிப்பதுடன், கீழிருப்போர் அனைவரையும் அடம் கொண்டு அவமதிப்புடனேயே நடத்துகின்றது. ஏனெனின், தன்னையே விரும்புவதும், பிறரை இகழ்வதும் எப்போதும் ஒரே அளவில் ஒன்றாக இணைந்திருப்பதைக் காண்கின்றோம். எனவே, தன்னையே விரும்பும் பான்மை மிகுதியாய் இருப்பதற்கு ஒப்ப அகந்தையும் மிகுதியாகவே இருக்கும். உண்மையான விழுப்பம் தன்னல மறுப்பிலிருந்து பிறக்கிறது.

அதாவது, நிலைபேறு கொண்ட கொள்கையை நடுநிலையுடன் பின்பற்றுவதலிருந்தே தோன்றுகின்றது. தனது கடமையை நிறைவேற்றுவதில் தனிப்பட்ட நோக்கங்கள் அனைத்தையும் ஒரு புறம் ஒதுக்கிவிட்டு முழுக்க முழுக்கச் சட்டத்தின் முறையே நிலைபேறு கொள்கின்ற பான்மையிலிருந்தே நீதிபதியின் விழுப்பம் தோன்றுகின்றது. நிலையற்றதும், விரைந்து மடிவதுமான அவனுடைய சிறிய தனி மனிதப் பண்பு வெறுமையாகி விடுகின்றது. அதே வேளையில் நிலைத்து நிற்பதும்,