பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159

ஜேம்ஸ் ஆலன்


வெளிப்படையாக நற்செயல்களைச் செய்யும் ஒருவன் அதே வேளையில் மறைவில் தீச் செயல்களைச் செய்யாதிருத்தல்.

7) நடுவுநிலைமை – நீதி தனக்காகவே போராடாது இருபக்கங்களையும் சீர்தூக்கிப் பார்த்து நேர்மையோடியைந்து செயலாற்றுவது.

8) தன்னம்பிக்கை – நிலைபெற்றதும், வெல்ல முடியாததுமான விதிகளின் வழிநின்று வலிமையையும், ஆதரவையும் தன்னகத்தேயே நாடுவதன்றி, எந்த நேரத்திலும் பறித்துவிடப்படக் கூடிய வெளிப்புறக் காரியங்களை நம்பாமலிருத்தல்.

இந்த எட்டு வழிகளின் மீது நடத்தப்படுகின்ற எந்த வாழ்வும் வெற்றிக்குப் புறம்பாக எவ்வாறு இருக்க முடியும்? அவற்றின் வலிமை எந்த உடல் வலிமையோ நுண்ணறிவு வலிமையோ ஒப்புமை காட்ட முடியாத திறத்தனவாகும். இந்த எட்டையும் நிறைவுறக் கட்டமைத்துக் கொள்ளுதல் ஒரு மனிதனை வெல்ல முடியாதவனாக்கி விடுகின்றது. எவ்வாறெனினும், மக்கள் பெரும்பாலும் இக் குணங்களில் ஒன்றிலோ பலவற்றிலோ வலிமையுடையவராகவும், பிறவற்றில் வலிமையற்றவராகவும் இருப்பதைக் காணலாம். இந்த வலுவற்ற கூறுதான் தோல்வியை வரவழைகின்றது. அதாவது, நன்மையானதும், இன்றியமையாததுமான ஏதேனும் குணம் இல்லாமலிருப்பதிலேயே தோல்வியின் காரணத்தைக் கண்டறிய வேண்டுமேயன்றி, அதனைக் கொண்டிருப்பதில் கண்டறியவியலாது.