பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 16


உள்ளக வெறுமை உண்டுபண்ணும் படிமுறையேயாகும். ஒழுக்க நெறியே அந்த அறிவுள்ள சிற்பி. ஒருவனிடம் அமைந்துள்ள ஒழுக்கமே அடிப்படை உருவம், கட்டமைக்கும் ஆற்றல் அனைத்தும் ஆகும். எப்போதும் தோல்வியடைந்து அழிவையும் உண்டு பண்ணுகின்ற நெறியின்மைக்கு எதிர்மறையாக இருப்பதால், ஒழுக்கநெறி எப்போதும் கட்டமைத்துக் காக்கின்றது; ஏனெனின், அதுவே அதன் இயல்பு. தனிமனிதர்களிடையேயும் சரி நாடுகளிடையேயும் சரி ஒழுக்க நெறியே எங்கணும் சிறந்த சொத்தாகும்.

ஒழுக்கநெறி தோற்கடிக்கப்பட முடியாதது; இறுதிவரை அதில் உறுதியாக நிற்பவன் கைப்பற்ற முடியாத ஓர் அரணில் இருப்பவனாகின்றான்; எனவே அவனுடைய வெற்றி உறுதியாக்கப்பட்டு விடுகின்றது. அவனுக்குத் துன்பங்கள், மிகக் கூடுதலான அளவில் ஏற்பட்டே தீரும்; ஏனெனின் போரின்றி வெற்றியிருக்க முடியாது. மேலும், நேர்த்தியாகவும், நிறைவுற்றதாகவும் கைவினைப் பட்டிருக்கும் பிற ஒவ்வொன்றைப் போலவும், அவைகளின் வலிமையை ஆய்வுசெய்து உண்மையெனக் காட்டுவது நிலைபெறு அற முறையில் நடப்பதாகும். உலகில் வலுவுடைய, இணையற்ற தேவைகளை நிறைவேற்ற வேண்டிய உருக்குக் கம்பிகள் வார்ப்படைத் தொழிற்சாலையினின்றும் வெளியே அனுப்படு முன்பு அவற்றின் உரத்தையும், தகுதியையும் ஆராயும் பொருட்டு இரும்பு பதப்படுத்துவோரால் அவை ஆய்வுக் குட்படுத்தப்பட்டேயாக வேண்டும்.