பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

ஜேம்ஸ் ஆலன்



கடுமையான வெப்பத்தால் உடைந்து விடுகின்ற செங்கல்களைச் செங்கல் செய்பவர் ஒதுக்கி எறிந்து விடுகின்றார், எனவே, மிகப் பெரிய அளவிலும் நீடித்து நிலைபெறும் வகையிலும் வெற்றியடைய வேண்டிய ஒருவன் தீங்கான சூழ்நிலைகளின் கடினப்பாடுகளைத் தாண்டிவிடுவான்; மேலும், அவாவெழுச்சியெனும் நெருப்பு அவனுடைய ஒழுக்க இயல்பிலிருந்து வெறுமனே வேரறுக்கப்படுவதில்லை; அது வலிமையூட்டப் பெற்று அழகு மேற்றப் படுகின்றது. உயர்ந்த தேவைக்குத் தகுதியாயிருக்கின்ற நிலையில் நன்கு கைவினைப்பட்ட உருக்குக் கம்பியைப் போன்று அவனிருப்பான்; இரும்மைப் பதனிடுவோர் நன்கு கைவினைப்பட்ட கம்பிகளைக் கவனித்துக் கொள்வது போன்று, அவனைப் பயன் நழுவிவிடாதபடி உலகம் கவனித்துக் கொள்ளும்.

நெறியற்ற மனிதன் தனது தீய வழிப்பலன்களைக் கண்டு உள்ளூர நகைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே அவனுடைய சட்டைப் பையில் இருக்கின்ற ஓட்டையின் வழியே அவனுடைய பொன் விழுந்து கொண்டேயிருக்கின்றது. ஒழுக்க நெறியுடன் வாழ்வு தொடங்குபவனும் ஆய்வுநிலையின் வேளையின்போது பலன் கருதி அதைக் கைவிடுவானேயாகில், அவன் முதன் முதலில் சூடேற்றப்பட்டதும் உடைந்து விடுகின்ற செங்கல்லைப் போன்றவனே ஆவான்; அவன் உதவிக்கு உகந்தவனன்று; உலகம் அவனை உதறியெடுத்து விடுகின்றது; முடிந்த முடிவாகவே