பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

ஜேம்ஸ் ஆலன்


வாய்ப்புக்களைத் தானே வருந்திக் கண்டு பயன்படுத்தி விடுகின்றான். முன்னவன் தன் கண்களைக் கசக்கிக் கொண்டிருக்கின்ற வேளையிலேயே பின்னவன் காரியங்களைச் செய்து முடிக்கின்றான்.

ஆற்றல் மூல ஆற்றல்களில் ஒன்று; அதுவின்றி எதையுமே செய்து முடிக்க வியலாது. செயல் வகைகள் அனைத்திற்கும் அதுவே அடிப்படையான மூலக்கூறு. இவ் உலகம் முழுமையாகப் புரியாததாயினும், சோர்வற்றதாயிருக்கின்ற ஆற்றலின் தோற்றக் காட்சியேயாகும். ஆற்றலே வாழ்வு; ஆற்றலின்றி வாழ்வுமில்லை. ஒரு மனிதன் செயல்படத் தவறுவானேயானால் அவன் இறந்தவனேயாவான். மனத்தைப் பொறுத்த நிலையிலும், உடலைப் பொறுத்த நிலையிலும் மனிதன் செயல்படுதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றானே அன்றி பன்றித்தனமான இளைப்பாறுதல் பெறுதற்காகவன்று. உடலிலுள்ள தசைநார் ஒவ்வொன்றும் முயற்சிக்கான நெம்புகோலாகும். ஒவ்வோர் எலும்பும் நாடி நரம்பும் உழைப்பிற்காகவே உருவாக்கப் பட்டிருக்கின்றன; நேர்மையாகப் பயன்படுத்தப் படுதற்காகவே ஒவ்வோர் இயக்கமும், செயல் திறனும் அமையப் பெற்றிருக்கின்றது. முயற்சிகள் அனைத்தும் செயல்படுதலையே தம் முடிவாகக் கொண்டிருக்கின்றன; செயல்திறங்கள் அனைத்தும் பயன்படுத்தப் படுவதிலேயே வாழ்வில் நிறைவு நிலை ஈய்துகின்றன.

வாழ்வில் சோம்பேறியான மனிதனுக்கு ஆக்கம் இல்லை; மகிழ்ச்சியில்லை; தஞ்சமில்லை; ஓய்வுமில்லை; அவன் நாட்டங் கொள்கின்ற இளைப்பாறுதல் கூட