பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 22


அவனுக்குக் கிடைப்பதில்லை; எனவே, திறமையுடன் முறைப்பாடாக உழைப்பதைத் தவிர்ப்பதால் மிகக் கடுமையான பளுவைத் தன்மீது சுமத்திக் கொள்கின்றான் என்ற பொருள்பட “சோம்பேறியான மனிதனே மிகக் கடுமையாக உழைக்கின்றான்” என்று முதுமொழி பொருட் செறிவுடன் கூறுகின்றது.

ஆற்றல் வாய்ந்த மனிதன் ஒரு நோக்கத்தையோ பல நோக்கங்களையோ செய்து முடிப்பதில் தன்னை முனைப்புடன் ஈடுபடுத்திக் கொள்கின்றான். நோக்கம் நன்மையான ஒன்றாக இருக்கலாம்; அன்றித் திண்மையான ஒன்றாக இருக்கலாம்; ஆனால், திண்மையாகவிருப்பின், அது தன் முன்கை முட்டியால் சுவரில் குத்தித் தன் கையினையே காயப்படுத்திக் கொள்கின்ற ஒருவனைப் போன்று, செய்பவனையே அழித்துவிடும் அளவிற்கு எதிர்தாக்குகின்ற வகையில் ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். உழைப்பாற்றல் எப்போதும் நன்மையானதே. தன்னோக்கில் செயல்படுத்துகையில் மட்டுமே அது பயனுடையதாகவிருக்கும்; அந்த நோக்கங்களை அடைந்துவிட்டால் அது மகிழ்ச்சி, வெற்றி, ஆக்கம் ஆகியவற்றை உருவாக்குகின்றன.

ஆற்றலே இல்லையெனும் நிலையைவிட ஆற்றல் தவறாகவேனும் செயல்படுத்தப் படுகின்ற நிலை சிறந்ததேயாகும். “வெப்பமாகவோ குறிர்ச்சியாகவோ நான் உன்னை ஏற்றுக் கொள்வேன்; நீ இளஞ் சூடாகவிருந்தால் உன்னை என் வாயினின்றும் நான் உமிழ்ந்துவிடுவேன்” என்று புனித ஜான் அவர்கள் கூறிய தொடர்களில் இது