பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 24


மனிதனாவான். எனவே, ஆற்றல் இல்லாத நிலையில் ஒழுக்க ஆற்றல் இருப்பதில்லை. இருக்கின்ற நன்னெறிப்பான்மை உள்ளுறைவதாகவும், உறங்குவதுமாகவே இருக்கும்; இயக்கச் சத்தியன்றுத் தானே இயங்குகை இல்லாதவாறு போன்று நன்மையுந் தானே நகருவதில்லை.

வாழ்வின் ஒவ்வொரு துறையிலும், உலகப் பொருளியலான திசைகளிலாயினும் சரி, ஆன்மீக திசைகளிலாயினும் சரி, செயல்கள் அனைத்திலும் ஆற்றலே அறிவுறுத்து ஆற்றலாக அமைந்திருக்கின்றது. படைவீரனிடமிருந்து மட்டுமன்றி, ஒவ்வொரு சிந்தனை நிலையிலுமுள்ள ஒவ்வோர் ஆசிரியன் வாயினின்றோ எழுதுகோலினின்றோ பறிக்கின்ற செயலுக்கான அழைப்பு, உறங்கிக் கொண்டிருக்கும் தனது ஆற்றலைத் தட்டியெழுப்பிக் கொண்டு கடமையை ஊக்கத்துடன் செய்யுமாறு மக்கட்கு விடுகின்ற அழைப்பேயாகும். வாழ்வின் கோணங்கள் அனைத்திலுமே ஒரே வகையான ஆற்றல் தேவைப்படுகின்றது; படை வீரர், பொறியியல் வல்லுநர், வணிகர் ஆகியோருக்குரிய விதிகள் மட்டுமே செயல் முறை விதிகள் என்பதில்லை; திருநிலையினர், அறிவர்கள், ஒழுக்கவாணர்கள் ஆகியோரின் கட்டளைகள் அனைத்துமே செயல்முறை குறித்த கட்டளைகளேயாகும்.

“மிகவும் விழிப்புணர்ச்சியுடன் இரு” என்று தம் மாணவர்களுக்குப் பேராசிரியர்களில் ஒருவர் கூறிய அறிவுரை, ஒருவன் கொண்ட குறிக்கோள் கைகூட வேண்டுமெனின் சோர்வற்ற ஆற்றல் இன்றியமையாதது என்பதைச் சுருக்கமான சொற்களில் விளக்கிக்