பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 28


கவருவதில்லை. மெத்தனப் போக்குடைய அண்டை வீட்டுக்காரன் வெற்றியடைவதும், அவனைப் பிறர் நாடிச் செல்வதும், அதேபோது எப்போதுமே பரபரப்பும், கவலையும், தொந்தரவையும் கொண்டுள்ள தான் தோல்வியடைவதும், தன்னைப் பிறர் தவிர்த்து கடப்பதுவும் ஏன் என்று அவன் வியப்புறுகின்றான். அண்டை வீட்டுக்காரன் அமைதியான மனிதனாக இருப்பதாலும் ஆழ்ந்தாய்ந்து செயலாற்றுபவனாக இருக்கின்றான்; மிகுதியான வேலைகளை விரைந்து முடிப்பதன்றி அதை மிகத் திறமையோடும் செய்து முடிக்கின்றான்; மேலும், மிகுந்த தன்னடக்கமும், ஆண்மையும் உடையவனாக இருக்கின்றான். இதுவே அவனுடைய வெற்றிக்கும் செல்வாக்கிற்கும் காரணமாகும். அவனுடைய ஆற்றல் அடக்கியாளப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோது அடுத்த மனிதனின் ஆற்றல் சிதறிச் சின்னாபின்ன மடைகின்றது.

ஆக்கமெனும் ஆலயத்தின் முதல் அடிநிலை ஆற்றலேயாகும்; முதன்மையானதும், சிறப்பானதுமான இந்த ஆற்றலின்றி ஆக்கம் இருக்கவே முடியாது. ஆற்றலில்லையெனின் திறமையில்லை என்றுதான் பொருள்படும். உழைப்பிற்கான இயற்கை விருப்பு அங்கில்லை யாதலால் ஆண்மை மிக்க தன்மதிப்பும், தன்னுரிமையும் இருப்பதில்லை. வேலையில்லாதோரில் பலர் உழைப்பிற்குரிய முதல் இன்றியமையாத ஆற்றல் இல்லாத காரணத்தால் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட முடியாதவர்களாக இருப்பதைக் காணலாம். உடல் கொழுத்தும், மனம் மந்தமாகவும் இருக்கும் மனிதன் இருக்கின்ற தனது போக்கை ஒவ்வொரு நாளும்