பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

ஜேம்ஸ் ஆலன்


மிகுதியாக்கி, உழைப்பிற்குத் தன்னை மேலும் தகுதியற்றவனாக்கி, அதன்மூலம் வாழ்க்கைக்கே தகுதியற்றவனாகி விடுகின்றான்.

ஆற்றலுடைய மனிதன் வேலையில்லாததும், இடர்ப்பாடுடையதுமான சிறுசிறு காலங்களைக் கடக்க நேரிடலாம். ஆனால், நிலையாக வேலையற்றிருப்போரில் ஒருவனாகிவிடுதல் அவனுக்கே இயலாத காரியமாகும். அவன் வேலையைத் தேடிக் கண்டுபிடித்து விடுவான்; அல்லது உண்டுபண்ணிக் கொள்வான், ஏனெனின், அவனுக்கு உழைப்பின்மை துன்பந் தரும். உழைப்பு களிப்பூட்டும்; உழைப்பில் களிப்பைக் காணுபவன் நெடுநாள் வேலையற்றிருப்பதில்லை.

சோம்புதலுடையவன் வேலையில் அமர்த்தப்பட விரும்புவதில்லை. அவன் எதுவுஞ் செய்யாது வாளாவிருத்தலின் போதே தன்னியல்புடன் இருப்பவனாகின்றான். முயற்சியைத் தவிர்ப்பது எவ்வாறு என்பதே அவனுடைய முதற் கல்வி, திமிர்ப்புகளில் தழைத்து வளருவதே இன்பத்தைக் குறித்த அவனுடைய கருத்து. அவன் தகுதியற்றவன், வேலைக்கமர்த்தப்படக் கூடாதவன். வேலையின்மை அனைத்தும் செல்வரின் செயல்விளைவே எனக் கூறுகின்ற சமூகப் பொதுவுடைமைக் கொள்கையாளருங் கூடி சோம்பலான, அசட்டையான ஆதாயமற்ற ஊழியராகவே பணிபுரிவதன் மூலம் வேலையில்லாப் படைக்குப் பணிபவரின் எண்ணிக்கையைக் கூட்டுபவரே ஆவர். ஏனெனின், சுறுசுறுப்பான, நேர்மையான உள்ளம் படைத்த மக்கள் அனைவருக்கும் வெறுப்பூட்டுகின்ற சோம்புதல் கீழ்த்தரமான பழிச் செயல்களில் ஒன்றாகும்.