பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 30



ஆற்றல் ஒரு கலவை உயிர்ப்பாகும். அது தனித்து நிற்பதில்லை. உரம் வாய்ந்த குணவியல்பை உருவாக்கும், ஆக்கத்தை விளைவிக்கும் பண்புகள் இதன் கண் அடங்கியிருக்கின்றன. முதன்மையாகக் கீழ்க்காணும் நான்கு பண்பியல்புக் கூறுகளிலேயே அவை உள்ளடங்கியிருக்கின்றன :

1. முந்தார்வம் 3. விடாமுயற்சி
2. விழிப்புணர்ச்சி 4. அக்கறை

எனவே, ஆற்றலெனும் அடிப்படை இந்த நான்கு உறுதியான மூலக் கூறுகளடங்கிய கட்டிடமாகும். அவை உறுதியானவை, நீடித்து நிலைபெறுபவை, துன்பத்தின் கொடிய காலநிலையைத் தாங்கும் வண்ணம் திட்டஞ் செய்யப்பட்டவை. அவையனைத்தும் வாழ்விற்கும் ஆற்றலுக்கும் திறமைக்கும் முன்னேற்றத்திற்கும் வழிகோலுபவை.

முந்தார்வம் விலையுயர்ந்த சொத்தாகும். அது நம்பிக்கையைப் படைக்கின்றது. சுறுசுறுப்புடையோராகவும், முந்தார்வமுடையோராகவும், காலம் தப்பாமையைக் கடைப்பிடிப்போராகவும் இருக்கின்ற மக்கள் நம்பிக்கைக்கு உரியவராகின்றனர். அவர்கள் தம் கடமையை ஊக்கத்துடனும், ஒழுங்காகவும் செய்து முடிப்பர் என நம்பலாம். விரைந்து செயலாற்றும் பணிமுதல்வர்கள் தம் பணியாளர்களுக்கொரு வலிமையூட்டும் மருந்தாவர். கடமை தவிர்க்குங் கருத்துடையோர்க்கு ஒரு கசையடியாவர். தம்மைத் தாம் நெறிப்படுத்திக்