பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

ஜேம்ஸ் ஆலன்


கொள்ளாதவர்க்கு அவர்கள் நற்பயன் விளைக்கும் ஒழுங்கு முறைக்கான ஒரு கருவியுமாவர். எனவே, தமது பயனுடைமையையும், வெற்றியையும் கையாற்றும் அதே வேளையில் பிறருடைய பயனுடைமைக்கும் வெற்றிக்கும் அவர்கள் உதவுகின்றனர்.

எப்போதும் காலங் கடத்துபவராகவும், எப்போதும் நேரந் தவறுபவராகவும் இருக்கின்ற அசட்டையான தொழிலாளி தனக்கில்லையெனிலும் பிறர்க்கு ஒரு தொந்தரவாகி விடுகின்றான். அவனுடைய பணிகளுக்கு ஆக்க மதிப்பு சிறிதளவே இருப்பதாகக் கருதப்படுகின்றது. முந்தார்வத்தின் ஏவல் பெண்களாகிய தீர சிந்தனையும், தீவிர விரையும் ஆக்கம் அடைவதற்கான பயன்மிக்க கருவிகளாகும். பொது வாணிபப் போக்குகளில் சுறுசுறுப்பு ஒரு செட்டான ஆற்றலாகும். முந்தார்வம் ஆக்கம் விளைவிக்கின்றது. சோம்பேறி எனப் பெயர் பெற்றோர் வாணிபத்தில் என்றேனும் வெற்றியடைந்துள்ளனரா என்பது ஐயப்பாட்டிற் குரியதாகும்.

மனத்தின் செயல் திறன்கள், ஆற்றல் அனைத்திற்கும் விழிப்புணர்ச்சியே காவலனாம். கொடியதும், அழிவு விளைப்பதுமான கூறுகள் எதுவும் உட்புகாமல் தடுக்கும் ஒற்றன் அதுவே. வெற்றி, விடுதலை, ஒளிமை அனைத்திற்கும் நெருங்கிய கூட்டாளியும், காவலாளியும் அதுவே. மனத்தின் இந்த எச்சரிக்கையான நோக்கு இல்லாத நிலையில் மனிதன் மூடனாகி விடுகின்றான். மூடனுக்கு ஆக்கம் வருவதில்லை. தன்னைத் தொந்தரை செய்யுவருகின்ற இழிந்த கருத்துகளும், கொடிய இச்சைகளும் தன் மனத்தின் ஆழ்சிந்தனை, அமைதி,