பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 32


தீர்ப்பு ஆகியவற்றை அடியோடு கொள்ளையிட மூடன் இடந் தந்து விடுகின்றான். அவன் என்றுமே பாதுகாப்புடன் இருப்பதில்லை. அழையாது நுழையும் ஒவ்வொரு கயமைத் தன்மைக்கும் தன் மனக் கதவுகளைத் திறந்து வைத்து விடுகின்றான். தன்னை விரட்டிப் பிடிக்கின்ற ஒவ்வோர் உணர்ச்சி வேகமும் தனது சமநிலையைத் துடைத்து அழித்துவிடும் அளவிற்கு அவன் அத்துணை வலுவற்றவனாகவும், உறுதியற்றவனாகவும் இருக்கின்றான. பிறர் எவ்வாறிருத்தல் கூடாது என்பதற்கு அவன் ஓர் எடுத்துக் காட்டாகும். அவன் எப்போதும் தோல்வியுறுபவனாகவே இருக்கின்றான். ஏனெனின், மூடனாக இருப்பவன் மனிதர் அனைவருக்குமே ஒரு பொல்லாப்பு; அவனை மதிப்புடன் வரவேற்கும் சமுதாயமே இல்லை. வலிமையின் முகடாக ஒளிமை இருத்தல் போன்று வலிமையின்மையின் அடுத்த கோடி மடமை.

சிந்தனையற்ற தன்மையிலும், வாழ்வின் சாதாரண நுணுக்கங்களிலுள்ள பொதுப்படையான தளர்ச்சியிலும் விழிப்புணர்ச்சியின்மை வெளிப்பட்டு விடுகின்றது. மடமையின் மற்றொரு பெயரே சிந்தனையின்மை, பெருவாரியனர் தோல்வி, துன்பம் ஆகியவற்றின் மூல காரணத்திலே அது அமைந்து கிடக்கின்றது. எந்த வகையான பயனுடைமையையும், ஆக்கத்தையும் குறிக்கொள்கின்ற எவனும் தன் செயல்களைக் குறித்தோ, அச் செயல்களால் பிறர்க்கு ஏற்படும் விளைவுகளையும், அவற்றின் எதிர்விளைவாகத் தனக்கே ஏற்படுவனவற்றையும் குறித்தோ கருதாது கண்மூடியாக இருக்க இயலாது. அவன் தனது வாழ்க்கைப் போக்கின்