பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

ஜேம்ஸ் ஆலன்


கொப்பாவர்” என ஒரு பேராசரியர் கூறியுள்ளார். மனம் முழுவதையும் அதன் கடமைக்கென உரிமையாக்குவதே அக்கறையாகும்.

நாம் என்ன செயல்படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்தே நாம் வாழுகின்றோம். தாம் செயல்படுத்துவது எதுவாயினும் அதில் உயர்ந்த மேம்பாடன்றி எவ்விதக் குறைபாடு ஏற்படினும் அக்கறை மிக்க மக்கள் மனநிறைவின்மை அடைகின்றனர். அவர்கள் எப்போதும் மேம்பாட்டை அடைந்து விடுகின்றனர். குறைபாடுடைய வினைமுறையில் திருப்தி காணுகின்ற கவனமற்றோரும் அரைமனம் கொண்டோரும் எத்துணையோ பேர் உள்ளனர். அக்கறையுடையோர் தமக்கே உரிய மேம்பாட்டுடன் தனித்துப் புகழொளி வீசுகின்றனர். பயனுடைமை, தொண்டு ஆகிய வரிசைகளில் அக்கறையுடைய மக்களுக்கு எப்போதும் மிகுதியான “வெற்றிடங்கள்” இருக்கின்றன. ஆழ்ந்த அக்கறை கொண்ட ஓர் ஆண்மகனோ பெண்மணியோ ஏதேனும் பொருத்தமான கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் என்றுமே இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை. அத்தகைய மக்கள் அதிநுட்பமுடன் செயல்படுபவர் மனச்சான்றிற்குக் கட்டுப்படுபவர், வருந்தி உழைப்பவர், சிறந்தோர்க்குச் சீர் வழங்க உலகம் எப்போதும் காத்திருக்கின்றது. பருப்பொருள் சார்ந்தனவோ, அறிவாற்றல் சார்ந்தனவோ, ஆன்மீகஞ் சார்ந்தனவோ ஆகிய செயல்கள் எவற்றிலாயினும் சரியே, ஒப்பற்ற மேம்பாடுடைய ஒன்றிற்குரிய முழு விலையை, பொருளாகவோ, புகழாகவோ, நண்பர்களாகவோ,