பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

ஜேம்ஸ் ஆலன்



பண்டமாற்றின் அடையாளம் பணம்; அது கொள்முதல் ஆற்றலை காட்டுகின்றது. செல்வச் செழிப்பினைப் பெறவேண்டுமென்று துடிப்பவனும், அதே போன்று கடன் இல்லாதிருக்க வேண்டுமென்று விரும்புபவனும், எப்போதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் நடைமுறை முதலுக்குச் சிறு பகுதியை விட்டுவைக்கும் வகையிலோ எந்த நெருக்கடி வரினும் கையில் தயாராகச் சிறு சேமிப்பைக் கொண்டிருக்கும் வகையிலோ, தனது வருவாய்க்கேற்பச் செலவினைப் பங்கிடுதல் எவ்வாறு என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சிந்தனையற்ற செலவினத்தில், பயனற்ற மகிழ்ச்சிகளிலோ கேடு தரும் சொகுசுகளிலோ செலவிடப்படுகின்ற பணம் பாழ்படுகின்றது. ஆற்றல் சிதைவுறுகின்றது. மேலும், நமது அன்றாட வாழ்வின் விளக்கங்களைப் பெரிதும் மேற்கொள்ளுகின்ற ஆற்றலுமாகும். ஊதாரி ஒருபோதும் செல்வவானாக இயலாது. ஆனால், அவனைச் செல்வங்கள் வந்தடையினும் அவன் விரைவில் ஏழையாகிவிடுவான். கஞ்சன் எத்துணைதான் பொன்னைப் பதுக்கி வைத்திருப்பினும், அவனைச் செல்வன் என்று கூறிவிட முடியாது. ஏனெனின், அவன் மேலும் மேலும் விரும்புகின்றான். பயன்படாது கிடக்கும் அவனுடைய பொன் கொள்முதல் சக்தியை இழந்துவிடுகின்றது. செட்டானவரும், முன்மதியுடையோருமே செல்வங்களைப் பெறுகின்ற வழியில் செல்வராகின்றனர். ஏனெனின், செட்டாகச் செலவிடும் அவர்கள் கவனமாகச் சேமித்து