பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

ஜேம்ஸ் ஆலன்


இயக்கவிசை வெளிப்பட முனையும்போது வட்டம் தொடர்ச்சியாகப் பரந்து விரிந்து கொண்டுதாணிருக்கும்.

உணவு, உயிர்க்களை, உயிர் ஆற்றல், உடல், மனம் இரண்டினுடையவும் வலிமை இவற்றைக் காட்டுகின்றது. பிற அனைத்தையும் போலவே உண்பதிலும், குடிப்பதிலும் கூட ஒரு நடுத்தரமான பாதையிருக்கின்றது. ஆக்கந் தேடவேண்டிய மனிதன் நன்கு பேணி ஊட்டப்பட வேண்டியதுதான்; ஆனால், அளவை மிஞ்சி ஊட்டப்படுதல் கூடாது. கஞ்சத்தனத்தாலோ துறவு பூண்பதாலோ தன்னுடலைப் பட்டினி போடுபவன் தன் மனவாற்றலைக் குறைத்துக் கொள்பவனாகின்றான். அதோடு, தன்னுடலை எந்த வலிமையான பேறும் பெறுதற்கான கருவியாகாத நிலையில் மிகவும் தோல்விக்கே ஏற்ற நிலையான நோயுற்ற மனநிலையை நாடுகின்றான்.

பெருந்தீனிக்காரன் மிகைப்பட உண்பதிலேயே தன்னை அழித்துக் கொள்கின்றான். முரட்டுத்தனம் ஊட்டப் பெற்ற அவனுடைய உடல், நோயையும் தீய தன்மையையும் ஈர்க்கின்ற நச்சுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற களஞ்சியமாகின்றது. மேலும், மேலும் விலங்குத் தன்மையுடையதாகவும், குழப்பமுற்றதாகவும் மாறித் திராணி அற்றதாகவும் ஆகிவிடுகின்றது. மிகையூண் ஆவல் கீழ்த்தரமானதும் விலங்கினப்பாங்கும் உடையது.

ஊணிலும், குடியிலும் நடுநிலைப் போக்குடையோரே சிறந்த உழைப்பாளர்களும், மிகவும் வெற்றியுறும் மக்களுமாவர். மிகைப்படாமல் போதுமான அளவு ஊட்டம்