பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 44


எடுத்துக் கொள்வதால் அவர்கள் உச்ச நிலையான உடல், மனத் தகுதி பெறுகின்றனர். இவ்வாறு நடுநிலைப்போக்கை மேற்கொள்வதால் அவர்கள் வாழ்க்கைப் போரை ஊக்கத்துடனும், களிப்புடனும் போரிடும் ஆற்றலைப் பெறுபவராகின்றனர்.

உடை, உடலுக்கான உறையும், பாதுகாப்புமாகும். ஆனால் இந்தச் செட்டான குறிக்கோளினின்றும் அது அடிக்கடி பின்னிழுக்கப்பட்டுப் பயனற்ற பகட்டிற்கான கருவியாக்கப்படுகின்றது. இங்குத் தவிர்க்கப்பட வேண்டிய ஆரவார ஆடை மெத்தனமும், பகட்டுமாகும். வழக்கத்தைப் புறக்கணிக்கவியலாது. புறக்கணிக்கப்பட வேண்டியதுமில்லை. சிறப்பு அனைத்தும் துப்புரவிற்கேயாகும். அழுக்குடை அணிந்து, தலைமுடியும் வாரிக் கொள்ளாத ஆணோ பெண்ணோ தோல்வியையும், தனிமையையும் விரும்பி அழைப்பவரே ஆகின்றனர். ஒரு மனிதனின் ஆடை அவன் வாழ்வில் வகித்து வருகின்ற நிலைமையுடன் இசைவு படுவதாக இருக்கவேண்டும். அது நல்ல தரத்தில் ஆக்கப் பெற்றதாயிருக்க வேண்டும். நன்கு தைக்கப் பெற்றதாகவும், பொருத்தமுடையதாகவும் இருக்க வேண்டும். ஒத்துப் பார்க்கையில் புதிதாகவே இருக்கின்ற உடையைக் களைந்து எறிந்துவிடுதல் கூடாது; அதை நன்கு அணிந்து பயன்படுத்த வேண்டும். ஒரு மனிதன் ஏழையாகவிருந்து நைந்துபோன உடையணிந்திருப்பினும் அது தூய்மையாகவும், அவனுடைய உடல் முழுவதும் தூய்மையாகவும் இருக்குமெனின், அவன் தன்மதிப்பையோ பிறர் காட்டும் மதிப்பையோ இழந்து விடுவதில்லை. ஆனால், உடையில் அளவுகடந்த