பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 46


பெண்மணியும், குறிப்பிடத்தக்க அளவு பொழுதை ஒதுக்கி வைக்கின்ற ஏதேனும் திட்டமான பணியை வாழ்வின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

மதிக்கப்பட்ட குறிப்பட்ட காலங்களில்தான் பொழுது போக்குக்காகவும், ஓய்வுக்காகவும் அவன் அதனின்றும் திரும்ப வேண்டும். ஒருவனின் கருத்தூன்றிய பணியில் ஆற்றல் மீதுர, உடல், மனம் இரண்டிலும் பெருமளவு கிளர்ச்சியைப் பெறுதலே பொழுதுபோக்கின் நோக்கமாகும். எனவே, அது ஒரு கருவியே அன்றிச் செயலாற்றலாகாது. இதை எப்பொழுதும் கருத்தில் கொள்ள வேண்டும். வாழ்வில் நோக்கம் எதுவுமின்றி வாழ்வை விளையாட்டுகள், மகிழ்ச்சிகள் இவற்றின் தொடர்ச்சியான வரிசையாக ஆக்கிவிடுதல், உயிர்வாழும் மக்களை அப்படியே தலைகீழாகத் திருப்புவதாகும்; அது சலிப்பையும், நலிவையும் உண்டு பண்ணுகின்றது. அதைச் செய்யும் மக்களே மாந்தர்களில் மிகவும் மகிழ்ச்சியற்றவராவர். அவர்கள் சோர்வு, அலுப்பு, முன்கோபம் இவற்றால் துன்புறுகின்றனர். சுவைச்சத்துச் செரிப்புக்கு உதவுமேயன்றி உணவாகக் கொண்டால் நோயுண்டு பண்ணும். அதே போன்று உழைப்பின் நடுநடுவே உற்சாக மூட்டிக் கொள்ளப் பொழுது போக்கேயன்றி, வாழ்வின் பணியாகவே அதைக் கொண்டுவிட்டால் துன்பத்திற்கு அது வழிகாட்டிவிடும். ஒரு மனிதன் தனது அன்றாடக் கடமையை முடித்து விடுவானேயாயின், அவனுடைய உழைப்பு, மகிழ்ச்சி இரண்டும் களிப்பிற்கான ஒரு கருவியாகிவிடும்.