பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

ஜேம்ஸ் ஆலன்




ஒருவனின் நேரம் முழுவதையும் உழைப்பிற்கோ பொழுது போக்கிற்கோ ஒதுக்கிவிடாது, அவை ஒவ்வொன்றிற்கும் நேரத்தையும், இடத்தையும் பகிர்ந்து பல்லாண்டு பயனுடன் வாழ்தற்கு வேண்டிய இன்றியமையாத மாறுதல்களால் வாழ்வை நிரப்பிக் கொள்வதே உண்மையான சிக்கனமாகும்.

உழைப்பிற்குப் பின்பு வலிமையைத் திரும்பப் பெறுதற்காகவே ஓய்வு. தன் மதிப்புள்ள ஒவ்வொரு மனிதனும் தனது உறக்கத்தை ஓய்வு நிறைந்ததாகவும், இனிமையானதாகவும் ஆக்கவும், துயிலுெழுவதைப் புத்துணர்ச்சியுடையதாகவும், மகிழ்ச்சியுடையதாகவும் ஆக்கவும் ஒவ்வொரு நாளும் போதுமான அளவு உழைக்கவேண்டும்.

போதுமான அளவு உறக்கங்கொள்ள வேண்டியதுதான்; மிகுதியான அளவு கூடாது. ஒரு புறம் அளவிற்கு அதிகமாக நுகர்வதோ மற்றொருபுறம் இழந்து விடுவதோ இரண்டும் கேடு பயப்பனவே. ஒருவனுக்கு எத்துணையளவு உறக்கம் தேவைப்படுகின்றது என்பதை அறிந்து கொள்ளுதல் எளிதான காரியமேயாகும். முன்னேரம் படுக்கச் சென்று முன்னேரம் எழுவதால் அவனோ அவளோ முழு வலிமையைத் திரும்பப் பெறுதற்கு எத்துணை மணிநேரம் தேவைப்படுகின்றது என்பதை விரைவில் நுட்பமாக அறிந்து ஒழுங்குசெய்து கொள்ளலாம். உறக்கங் கொள்கின்ற மணி நேரங்களைக் குறைத்துக் கொண்டால் தூக்கம் மிகமிக ஆழ்ந்ததும், இனிமை உடையதாகவும் துயிலெழுதல் மிகமிகச் சுறு சுறுப்பும், மகிழ்ச்சியுடையதாகவும் இருப்பதைக் காணலாம். தமது