பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 48


பணியில் செழித்துக் கொழிக்க வேண்டியவர்கள் பழிக்கத்தக்க தளர்ச்சிக்கும், அளவிற்கதிகமான உறக்கத்திற்கும் இடங்கொடுக்கலாகாது.

வாழ்வின் உண்மையான குறிக்கோள் பயனுடைய உழைப்பேயன்றி, இளைப்பாறுதலாகாது. உழைப்பின் பயன்களை எய்துதற்குச் சார்பான உதவியளிப்பது வரையில்தான் இளைப்பாறுதல் நன்மை தருவதாகவிருக்கும். சோம்பலும் ஆக்கமும் என்றுமே கூட்டாளிகளாக முடியாது. ஒன்றுக் கொன்று என்றுமே உறவு கொள்ள முடியாது. சோம்பேறி என்றுமே வெற்றியை ஓடிப்பிடிக்கவியலாது. ஆனால், தோல்வி அவனை விரைவில் ஓடிப்பிடித்து அவனைத் தோற்கடித்துவிடும். பெருமளவு உழைப்பிற்கு நம்மைத் தகுதியுடையவராக்கிக் கொள்வதற்கு ஓய்வே அன்றி, சோம்பலூட்டி நம்மைக் கெடுத்துக் கொள்வதற்காகவன்று. உடல் வலிமையைத் திரும்பப் பெற்றுவிடுகின்ற மாத்திரத்திலேயே ஓய்வின் பயன் நிறைவேறி விடுகின்றது. உழைப்பிற்கும், ஓய்விற்குமிடையே நிறைவான சமநிலையைக் கொண்டிருத்தலே நலன், மகிழ்ச்சி, ஆக்கம் இவற்றைப்பெறக் குறிப்பிடத்தக்க உதவி செய்வதாய் அமையும்.

காலம் என்பது நாம் அனைவரும் சமமான அளவில் கொண்டிருக்கும் ஒன்றாகும். எந்த மனிதனுக்கும் தனிப்படையாக நாட்பொழுது நீடிக்கப்படுவதில்லை. எனவே, அதன் விலையுயர்ந்த நிமியங்களைப் பயனற்ற பாழ்காரியங்களில் வீணே கழித்து விடாது நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். தன்னல நுகர்ச்சியிலும்,