பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 50



காலையில் கடைசி நொடி வரையில் படுக்கையிலேயே புரண்டுவிட்டுக் காலையுணவைத் தொடங்கும் நேரத்திற்குக் கண்விழிக்கும் மனிதனைக் காட்டிலும், சீர்தூக்கி ஆராய்ந்து வருமுன்னறியும் பொருட்டுச் சிந்திக்கவும், திட்டமிடவும் அதிகாலையில் துயிலெழும் மனிதனிடம், அவனது குறிப்பிட்ட முயற்சியில், மிக்க திறமையும், வெற்றியும் காணக் கிடக்கும். காலையுணவிற்கு முன்பு இவ்வகையில் செலவிடப்படுகின்ற ஒரு மணி நேரம், ஒருவனுடைய முயற்சிகளைப் பயனுடையதாக்குவதில் மிகுந்த உதவியாயிருக்கும்.

மனத்தை அமைதியாக தெளிவுடையதாக்கி ஒருவனின் ஆற்றல்களை மிகுந்த சக்தியும், பயனும் உடையனவாக்குதற்கு இது ஒரு கருவியாகும். காலையில் எட்டுமணிக்கு முன்பு பெறுகின்ற வெற்றியே சிறந்ததும், மிகுந்த நிலைபேறுடையதுமாகும். பிற சூழ்நிலைகள் அனைத்தும் சமமாயிருக்கின்ற நிலையில் ஆறு மணிக்குத் தனது உழைப்பில் ஈடுபடுகின்றவன் எட்டு மணிவரை படுக்கையிலே இருக்கின்ற மனிதனை விட எப்போதும் நீண்ட தூரம் முன்னேறிவிடுவான். படுக்கை விரும்பி வாழ்வுப் பந்தயத்தில் தனக்குத் தான் பெரும் முட்டுக்கட்டை போட்டுக் கொள்பவனாகி விடுகின்றான். அதிகாலையில் துயிலெழுகின்ற போட்டியாளன் ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்றுமணி நேரங்கள் முன்னரே உழைப்பைத் தொடங்குவதற்கு இடந் தந்துவிடுகின்றான். தனது பொழுதைப் பொறுத்துத் தனக்குத் தானே விதித்துக் கொண்ட அத்தகைய இடர்ப்பாட்டை வைத்துக் கொண்டு எவ்வாறு அவன் வெற்றியடைந்துவிடலாம் என