பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

ஜேம்ஸ் ஆலன்


நம்ப முடியும்? ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்றுமணி நேரங்கள் முன்னரே தொடங்கியதன் பயன் ஓராண்டு முடிவில் படிப்படியாகச் சேகரிக்கப்பட்ட விளைவுகளின் தொகுப்பாகிய வெற்றியின்பால் காணக்கிடைக்கும்.

படுக்கைப் பிரியனுங் கூடக் கண் விழித்தெழுந்த பின்பு இழந்த பொழுதை ஈடு செய்தற் பொருட்டு எப்போதும் பரபரப்படைகின்றான். அது மேலும் பொழுதை இழக்கும் நிலையிலேயே முடிகின்றது. ஏனெனின், பரபரப்பு எப்போதும் தான் குறிக்கொண்டதையே தோற்கடித்து விடும். அதிகாலை துயிலெழுவதனால் தனது பொழுதைச் சிக்கனப் படுத்திக் கொள்பவன் பரபரப்படைய வேண்டிய தேவையேயில்லை. ஏனெனில், எப்போதும் அவன் குறித்த நேரத்திற்கு முன்பே ஆயத்தமாகி விடுகின்றான். எப்போதும் அவன் தன் வேலையை நன்கு செய்து முடிக்கின்றான்; அவன் கைக் கொண்ட பணி எதுவாயினும் அதை அமைதியுடன் ஆழ்ந்து எண்ணி, கவனமுடன் நன் முறையில் செய்யவியலும். அவனுடைய நற் பழக்கம் நாள் முடிவில் மகிழ்ச்சி நிரம்பிய மனமெனுந் தோற்றத்திலும், திறமையுடன் வெற்றிகரமாகவும் செய்து முடிக்கப்பட்ட உழைப்பின் உருவமெனும் பெரும் விளைவுகளிலும் தன்னை வெளிப்படுத்திவிடும்.

காலத்தைச் சிக்கனப் படுத்துவதிலுங்கூட ஒரு மனிதன் தன் வாழ்வினின்றும் நீக்க வேண்டிய காரியங்கள் பல இருக்கும். அவன் ஆசை கொண்டு தான் கொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகின்ற சில காரியங்களையும், நாட்டங்களையும் கூட வாழ்வின் சிறப்புக்