பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 52


குறிக்கோளிற்காகத் தியாகம் செய்தாக வேண்டும். ஒருவனின் அன்றாட வாழ்வினின்றும் சிறப்பற்றவற்றை உற்றறிந்து ஒதுக்குதல் பெரும் ஆக்கங்கள் அனைத்தினிடத்தும் உயிர்நிலையான கூறாகும். மேன்மையான மனிதர் அனைவரும் சிக்கனத்தின் இப்பிரிவில் திறமைசாலிகளாக இருக்கின்றனர். அவர்களது மேன்மையைப் பெருக்குவதில் இது முக்கிய பங்கு கொள்கின்றது. மேலும், உள்ளம், உரை, செயல் ஆகியவற்றுள்ளும் புகுந்து அவற்றினின்றும் தேவையற்றவை, தடைவிதிப்பவை, குறிக்கொண்ட முடிவை எய்த உடனிருந்து உதவாதவை இவற்றை நீக்குவது ஒருவகைச் சிக்கனமாகும்.

உண்மையான செட்டுக்காரனின் மனம், வாழ்வெனும் வாணிபத்திற்குப் பயன்படுவன தவிர, பிற ஒவ்வொன்றும் நழுவிச் செல்ல விட்டுவிடுகின்ற சல்லடையாகும். மேலும், தேய்வையும், ஆற்றல் பாழ்படுதலையும் வெகுவாகக் குறைக்கும் வண்ணம் அவன் தேவையான சொற்களை மட்டுமே கையாளுகின்றான். தேவையான செயல்களை மட்டுமே செய்கின்றான்.

பொழுதோடு படுக்கச் சென்று பொழுதோடு விழித்தெழுந்து உழைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன் நிறைந்த எண்ணத்தாலும், செயல் முற்றிய செயலாலும் நிரப்புவது, இதுவே நேரத்தைப் பொறுத்த உண்மையான சிக்கனம்.

நற்பழக்கங்களை மேற்கொள்வதால் ஆற்றல்