பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

ஜேம்ஸ் ஆலன்


சிக்கனப் படுத்தப் படுகின்றது. பழிச்செயல்கள் அனைத்தும் ஆற்றலைக் கவனமின்றிச் செலவிடுவதேயாகும். பேணிக் காத்துச் சரியான திசைகளில் பயன்படுத்தினால் மனிதர் மாபெரும் வெற்றியைப் பெறுவதை இயலுவதாக்கப் போதுமான ஆற்றல் சிந்னையின்றித் தீய பழக்கங்களில் பாழ்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே எடுத்துக் காட்டப்பட்ட ஆறு முக்கிய காரியங்களில் சிக்கனம் கடைப்பிடிக்கப் பெற்றால், ஒருவனின் ஆற்றலைப் பேணிக் காப்பதில் பெருமளவு வேலை முடிந்துவிடும்; ஆனால், மனிதன் பின்னும் முன்னேற வேண்டும்; தீயநெறி வகைகள் அனைத்தையும் தவிர்ப்பதின் மூலம் தனது உயிர்ப்பாற்றலைக் கவனமுடன் செட்டாக நடத்த வேண்டும்; இங்குத் தீயநெறி என்பது உடல் சார்ந்த இன்ப நுகர்ச்சிகள், தூய்மையின்மைகள் இவற்றின் வகைகள் அனைத்தையும் மட்டுமே குறிப்பதாகாது. ஆனால் மனத்தை வெறுமையாக்கி, அதை எந்தச் சிறப்பான பணிக்கோ பாராட்டத் தக்க செயலாக்கத்துக்கோ தகுதியற்றதாக்கிவிடுகின்ற பரபரப்பு, கவலை, கிளர்ச்சி, சோர்வு, சினம், குறைகூறல், பொறாமை ஆகிய மனத் தீயநெறிகள் அனைத்தையுங் கூடக் குறிப்பதாகும். அவை மனச் சிதறலின் சாதாரணத் தோற்றங்களாகும். சிறப்புள்ள மனத்தின் அவற்றைத் தவிர்த்து வெற்றி காணுவது எவ்வாறு என்பதைக் கற்றுணர வேண்டும்.

இழிவான மனநிலை அடிக்கடி வந்துற்று வெளிகொள்வதால் பாழ்படுத்தப்படுகின்ற ஆற்றலை அடக்கியாண்டு நேர்பட இயக்கினால், அது மனிதனுக்கு