பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

ஜேம்ஸ் ஆலன்


அழிக்கப்படுகின்றன. மட்டு மீறியவர்கள் தம் மடமையால் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். அவர்கள் தம் ஆற்றல்களை வலுவிழக்கச் செய்து, தம் திறமைகளைக் குன்றச் செய்துவிடுகின்றனர். நிலைபேறு கொள்ளும் வெற்றியைப் பெறுதற்கு மாற்றாகக் கூடிய அளவில் நிலைபேறற்ற, உறுதியற்ற ஆக்கத்தையே அடைகின்றனர்.

ஒருவனின் வலிமைகளையும், ஆற்றல்களையும் சரிவரப் பேணிக் காப்பதினின்றுமே திறமைப்பாடு தோன்றுகின்றது. திறமை அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட்ட ஆற்றலைப் பயன்படுத்துவதேயாகும். சிறப்புத் திறமையாகவும், தனித் திறமையாகவும் இருக்கின்ற மேம்பட்ட திறமை ஒருமுகப்படுத்திய வலிமையின் உயர்ந்த நிலையாகும். மனிதர் தாம் நாட்டங் கொள்கின்ற ஒன்றினிடம் எப்போதும் திறமை உடையவராகவே இருக்கின்றனர்; ஏனெனில், மனம் ஏறத்தாழ இடையறாது அதைச் சுற்றிய வண்ணமாகவே இருக்கின்றது. எண்ணத்தைப் புதுப்புனைவாகவும், செயலாகவும் உருமாற்றுகின்ற அந்த மனச்சிக்கனத்தின் விளைவே, திறமைப்பாடாகும். திறமைப்பாடின்றி ஆக்கம் இருக்கவே முடியாது.

ஒருவனின் ஆக்கம் அவனுடைய திறமையின் அளவைப் பொறுத்தே அமைந்திருக்கும். திறமைப்பாடில்லாதோர், இயற்கையான தேர்வு முறையின் மூலம், குறைந்த ஊதியம் பெறுவோர் அன்றி வேலையற்றோர் இவர்களின் வரிசையில் தமக்கொத்த இடங்களில் அமைவுற்று விடுகின்றனர். ஏனெனின், தன்னுடைய