பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 58


வேலையைச் சரிவரச் செய்யவியலாத – செய்யத் தலைப்படாத ஒரு மனிதனை யார் வேலைக்கமர்த்துவர்? அத்தகு மனிதனை இரக்கச் சிந்தையால் எவரேனும் பணிமுதல்வர் சிற்சில சமயங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இது மிகவும் அரிதானது. ஏனெனின், வாணிப நிலையங்கள், அலுவலகங்கள், குடும்பங்கள் ஒழுங்கமைந்த செயல்முறையுடைய இடங்கள் ஆகிய அனைத்தும் ஈகைக்கான நிலையங்களல்ல. ஆனால், அவற்றின் தனித்தனி உறுப்பினர்களின் தகுதி, திறப்பாடு இவற்றால் நிலைத்து நிற்கவோ மடியவோ செய்கின்ற தொழில் நிறுவனங்களாகும்.

ஒருவன் தன் கூட்டாளிகளின் இடையில் வகிக்கின்ற இடத்தைத் திறமைப்பாடே பெரிதும் முடிவு செய்கின்றது; மிகுதியான ஆற்றல்கள் வளர வளர, அதுவே அவனைப் படிப்படியாக உயர்ந்த நிலைகளை எய்த வழி காட்டுகின்றது. நல்ல தொழிலாளி தன் கருவிகளைக் கொண்டு திறமையுடையவனாக இருக்கின்றான்; அதேபோது, நல்ல மனிதன் தன் சிந்தனையைக் கொண்டு திறமையுடையவனாக இருக்கின்றான். நல்லறிவே திறமையின் மேன்மையான வடிவம். உளச்சார்பு தொடக்க நன்மை, மிகச்சிறிய காரியமுட்பட ஒவ்வொரு காரியத்தையும் செய்து முடிக்க ஒரே நேர்வழியும், ஆயிரம் தவறான வழிகளும் உண்டு. இந்த ஒரே நேர் வழியைக் கண்டுபிடித்து அதன் வழி ஒழுகுவதிலேயே திறமை அடங்கியிருக்கின்றது. அந்த ஆயிரம் தவறான வழிகளின் நடுவே திறப்பாடற்றவன் குழப்பமுற்றுக் குளறுபடி செய்வதோடு நேரான வழியைச் சுட்டிக் காட்டியும் கூட