பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 60


தூயநெறிகளையோ உடலின் தீயநெறிகளையோ தவிர்த்து விடுகையில், அவ்வாறு பேணிக் காக்கப்படுகின்ற ஆற்றல் என்னவாகின்றது? அது அழிக்கப்படவுமில்லை, இழக்கப்படவுமில்லை. ஏனெனின், ஆற்றல் அழிக்கப்படுவதுமில்லை அன்றி இழக்கப்படுவதுமில்லை. அது உற்பத்தி ஆற்றலாகவே உருமாறுகின்றது. பயனுடைய சிந்தனை எனும் வடிவத்தில் அது திரும்பத் தோன்றுகின்றது.

அறநெறியுள்ள மனிதன் மறநெறியுள்ள மனிதனைவிட மிகுதியான வெற்றி அடையவனாகவே இருக்கின்றான். ஏனெனின், அவனிடம் வளப்பங்கள் கிளைத்து நிற்கின்றன. சேகரிக்கப்பட்ட ஆற்றல் செழித்திருக்க அவனுடைய மனப்பாங்கு முழுவதும் உயிர்ப்புடனும் ஊக்கத்துடனும் இருக்கின்றது. தீயநெறி கொண்ட மனிதன் பயனற்ற நுகர்ச்சிகளில் பாழ்படுத்துவதை நன்னெறிகொண்ட மனிதன் பயனுடைய உழைப்பில் செலவிடுகின்றான்.

விலங்கினத் தீயநெறி எனும் பழைய உலகினின்றும் தன்னைத் தனித்துப் பிரித்து விடுகின்ற மனிதனுக்குக் கண்ணைக் கவரும் நாட்டங்கள், தூய்மையான களிப்புகள் அனைத்தும் செழித்திருக்கின்ற ஒரு புதிய வாழ்வும், புதிய உலகமும் திறக்கப்படுகின்றன. அவனிடம் நல்லுருப் பெற்றுவிடுகின்ற வளப்பங்கள் அவனுக்குரிய இடத்தை உறுதியாக்கிவிடும்.

பயனற்ற விதைகள் மண்ணிலேயே மறைந்து விடுகின்றன; இயற்கையின் பயனுடை முறை அமைப்பில்