பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

ஜேம்ஸ் ஆலன்


அதற்கு இடமேயில்லை. பயன்படா மனங்கள் வாழ்வுப்போராட்டத்தில் அமிழ்ந்து விடுகின்றன. மனித சமூகம் நல்லோர்க்கே வாய்ப்பளிக்கின்றது; தீயநெறி தோற்றுவிக்கும் வெறுமைக்கு அங்கு இடமேயில்லை. ஆனால், பயனற்ற மனமும் முடிவின்றி மூழ்கி விடுவதில்லை. அது விருப்பங் கொண்டால் பயனுடையதாக மாறித் தானிழந்ததைத் திரும்பப் பெற்றுவிடலாம். இயற்கையின் இயல்புப்படி, முன்னேற்றத்தின் நிலையான விதியின்படி, தீயநெறி கொண்ட மனிதன் வீழ்ந்தேயாக வேண்டும்; வீழ்ந்த பின்பு அவன் திரும்ப எழுந்துவிடலாம். அவன் மறநெறியிலிருந்து அறநெறிக்கு மாறித் தன்மதிப்புடனும், தற்பாதுகாப்புடனும் தனது வளப்பங்களின் மீது நிலைபேறு கொள்ளலாம்.

கூர் அறிவுள்ள மனிதர் புதியது புனைகின்றனர், கண்டுபிடிக்கின்றனர், தொடங்கி வைக்கின்றனர். அவர்கள் தோல்வியடைய இயலாது. ஏனெனின், அவர்கள் முன்னேற்ற ஓட்டத்தில் இருக்கின்றனர். அவர்கள் புதுத்திட்டங்கள், புது வழிவகைகள், புது நம்பிக்கைகள் நிரம்பியவர்களாயிருக்கின்றனர்; அதன் காரணமாக அவர்கள் வாழ்வு அத்துணையளவு நிறைவும், செழிப்பும் கொண்டதாயிருக்கின்றது. அவர்கள் எளிதில் வளையும் உள்ளம் படைத்த மனிதர். மனிதன் தன் தொழிலைத் தன் உழைப்பை, தன் வழிவகைகளைச் செம்மையானதாக்கத் தவறிவிடுவானெனின், முன்னேற்றக் கோட்டினின்றும் புறம் வீழ்ந்தவனாகி விடுகின்றான்; தோல்வியைத் தொடங்கிவிடுகின்றான். வயது முதிர்ந்த மனிதனின் உடலைப் போன்று அவனுள்ளம் விறைப்பும், மந்தமும்,