பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

ஜேம்ஸ் ஆலன்


ஒருவனின் மன ஆற்றல்களை நிறைவாகவும், நேராகவும் பயன் படுத்துவதால் திறமையின் அளவு கோலில் ஏற்றம் பெற்று மேம்பாட்டிலிருந்து மேம்பாட்டிற்குச் செல்லுவதாலேயே அதை வளர்க்க முடியும். மனிதன் தன்னைத் தானே தன் வேலைக்கென ஒப்படைத்துவிடட்டும்; அவ்வாறு ஒப்படைத்த பின்பு அதன்மீது தன் ஆற்றல்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிடட்டும்; உலகம் தன் வலிமை மிக்க மக்களுள் ஒருவனாக அவனை வாழ்த்தும் நாள் வந்தே தீரும். பல ஆண்டுகள் விடா முயற்சியுடன் உழைத்த பின்பு “நான் ஒரு தனித்திறமை படைத்தவனாகப் போகின்றேன்” என்று விதந்துரைத்த பால்ஸாக் போன்று தானும் உற்பவ மனங்கள் குழுவுடன், அதாவது மனித இனத்தைப் புதிய, உயர்ந்த, மிகுநலஞ்சூழ் வழிகளில் நெறிப்படுத்துகின்ற களிப்போடு கடைசியில் கண்டு கொள்வான்.