பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 64



சால்பு

ஆக்கத்தை மலிவாக விலைபேச முடியாது. கூரிய அறிவு கொண்ட உழைப்பினால் மட்டுமே ஒழுக்க ஆற்றலைக் கொண்டே அதை விலைக்கு வாங்கியாக வேண்டும். நீர்க்குமிழி நீடித்து நிலைபெற முடியாதது போன்று, கபடன் செழிக்கவும் முடியாது. பணத்தைப் பெறுவதற்கு ஆர்வத்துடிப்புடன் அவன் பாய்கின்றான், பின்பு படுத்து விடுகின்றான். ஏமாற்றுவதால் என்றுமே எதையும் பெற முடிந்ததில்லை; என்றுமே பெறவும் முடியாது. அவ்வாறு அடையப் பெற்றவை எதுவாயினும், அது மிகுதியான வட்டியுடன் திரும்பத் தரப்பட வேண்டிய நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிடித்து வைத்துக் கொள்ளப்படுவதே யாகும். ஆனால், ஏமாற்றுதல் தீவினைக்கு அஞ்சாத எத்தனிடம் மட்டுமே அடைபட்டுக் கிடக்கவில்லை. அவர்கள் அறிந்திருப்பினும் சரி, இல்லையெனினும் சரி, சரிசமமான ஒன்றை மாறாகத் தராமல் பணத்தைப் பெறுவோர் அல்லது பெற முயல்வோர் அனைவரும் ஏமாற்றுவதைக் கையாளுபவரே யாவர்.

பெறுதற்கான உழைப்பை மேற்கொள்ளாது பணத்தைய பெறுவது எவ்வாறு என்று பற்றார்வமுடன் திட்டமிடும் மனிதர் எத்தர்களேயாவர். இவர்கள் மனத்தால் திருடனோடும், ஏமாற்றுக்காரனோடும்