பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 72



நாணயமின்மை நேர்மாறான விளைவை உடையதாக இருக்கின்றது. பிறருடைய நம்பிக்கையை அழித்துவிடுவதால் அது அவர்களிடையே ஐயப்பாட்டையும், நம்பிக்கைக் கேட்டையும் உண்டு பண்ணுகின்றது; இவை தோல்வியில் முடிவு பெறுகின்ற ஒரு மோசமான பெயரை உண்டு பண்ணுகின்றது.

சால்பென்னுந் தூண் வீறியமுள்ள இந்த நான்கு கூறுகளாலும் ஒருமித்து வைக்கப்படுகின்றது.

1. நாணம் 3. இலக்கு
2. அஞ்சாமை 4. வெல்லக் கூடாமை

நாணயம் வெற்றிக்கான உறுதியான வழியாகும். நாணயமற்ற மனிதன் துன்பத்திலும், துயரத்திலும் கழி விரக்கம் கொள்கின்ற நாள் வந்தே தீருகின்றது. ஆனால். நாணயமுடன் இருந்துவிட்டதற்காக எந்த மனிதனும் என்றுமே கழிவிரக்கம் கொள்ளத் தேவையில்லை. நாணயமுள்ள மனிதன் தோல்வியடைந்து விடினும் கூட, நாணயமற்ற மனிதனுக்கு இருப்பதைப் போன்று அத் தோல்வி அவனுக்குத் துக்கந் தருகின்ற காரியமன்று. ஏனெனின், தன்னைப் போன்றோன் ஒருவனை அவன் என்றுமே வஞ்சித்ததில்லை எனும் உண்மையில் அவன் மகிழ்ச்சியடையலாம். அவனுடைய இருண்ட நேரத்திலும் அவன் தெளிவான மனச்சான்றுடன் இளைப்பாறுதல் பெறுகின்றான்.

நாணயமின்மை ஆக்கத்தைப் பெறும் ஒரு குறுக்கு வழியென அறிவற்ற மனிதர் எண்ணுகின்றனர். இது