பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 76


மனிதனாவான். அவன் ஊகிப்பதுமில்லை, இருளில் உழைப்பதுமில்லை. அவனுடைய திட்டங்கள் அனைத்தும் அவனுடைய குணவியல்பு வார்த்தெடுக்கப் பட்டிருக்கின்ற குணவியல்புத் திறத்தில் சிறிதளவைக் கொண்டதாகவே இருக்கும்.

எந்தச் சூழ்நிலையைப் பொறுத்தும் மிகவும் பரந்த நோக்கத்தைக் கொண்டிருக்கின்ற அதே வேளையில் நுணுக்கங்களையும் அவற்றுள்ளடங்கிய நியதிகளையும் விரிபொருள் அகங்கொள்ளும் வகையில் புரிந்து கொள்ளும் நிலை அவனுக்கு அளிக்கின்ற உயர்ந்த ஆற்றலையும் கையாளுகின்றான். ஒழுக்க நெறி எப்போதும் வேளைக்கேற்ற பொருத்தமெனும் அனுகூலத்தை உடையதாயிருக்கின்றது. அதனுடைய உட்கோள்கள் எப்போதும் மேற்பரப்பினின்றும் மிகுந்த ஆழத்தை யடைந்து விடுகின்றது; எனவே, அது மிகுந்த உறுதிப்பாடும், மிகுந்த வலிமையும், நீடித்த நிலைபேறும் கொண்டதாயிருக்கின்றது. சால்பைப் பொறுத்த வரை அதில் ஒர் இயற்கையான நேர்முகப் பாங்கும் இருக்கின்றது; இது, மனிதன் செய்வது எதுவாயினும் அவன் நேராக இலக்கை நோக்கிச் செல்ல உதவியளிப்பதுடன், தோல்வியை ஏறத்தாழ இயலாத தாக்கிவிடுகின்றது.

வலிமைமிக்க மனிதர் வலிமைமிக்க இலக்குகளைக் கொண்டிருக்கின்றனர். வலிமைமிக்க இலக்குகள் வலிமைமிக்க பேறுகளுக்கு வழிகாட்டுகின்றன. சால்புடைய மனிதன் பிற மனிதர் அனைவரையும் விட உயர்ந்த வலிமையுடையவனாக இருக்கின்றான்; தனது வாழ்வெனும் வாணிபத்தை அவன் நடத்துகின்ற