பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 80


ஒரு மேலாளரின் கைகளில் தனது வாணிபத்தை முழுமையாக ஒப்படைக்கவில்லையெனின் வாணிபத்தில் அவன் வெற்றி காண இயலாது. அதன் மூலம் அவன் தன் சொந்தக் குறைபாட்டிற்கும் கழுவாய் கண்டு கொள்பவனாகின்றான்.

பெரிய தொழில் வாணிப நிறுவனங்கள் அனைத்தும் திட்பமுடன் வரையப்பெற்ற முறைப்பாட்டு நெறிகளின் போக்கிலேயே படி வளர்ச்சி பெற்றிருக்கின்றன. அதில் எதையேனும் மீறுதல் வாணிபத்தின் திறமைக்கும், சேமத்திற்கும் அழிவினை உண்டாக்கிவிடும். இயற்கையிலுள்ள பல கலவைப் பிழம்புகளைப் போலவே, நுணுக்கங்களில் அதிநுட்பக் கருத்துச் செலுத்துவதன் மூலமே, சிக்கலான தொழிலோ பிற நிறுவனங்களோ கட்டமைக்கப் பெறுகின்றன. சிறப்பான குறிக்கோளைத் தவிர பிற ஒவ்வொன்றைப் பொறுத்தும் அக்கறையற்றிருக்கலாம் என ஒழுங்கில்லா மனிதன் எண்ணுகின்றான். ஆனால், வழிவகைககைளப் புறக்கணிப்பதன் காரணமாக அவன் குறிக்கோளையே முறிக்கின்றான். நுணுக்கங்கள் சீர் கெடுக்கப்படுவதால் அங்கக் கட்டுப்பாடு அழிகின்றது; நுணுக்கங்களைக் கருத்துான்றிக் கவனியாது புறக்கணிப்பதால் எந்தப் பணியும், அல்லது நிறுவனத்தின் வளர்ச்சியும் தடைபடுகின்றது.

ஒழுங்கில்லா மக்கள் மிகப்பெரிய அளவில் நேரத்தையும், ஆற்றலையும் யாழ்படுத்துகின்றனர். பொருள்களைத் தேடுவதில் சிதறடிக்கப்பட்ட நேரம் ஒழுங்கமைவுடன் பேணிக் காக்கப்பட்டிருப்பின் எவ்வகை வெற்றியையும் பெறுதற்கு அவர்களுக்கு உதவி புரியப்-