பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

ஜேம்ஸ் ஆலன்


போதுமானதாகும். ஏனெனின், எதைப் பெறுவதாயினும் சோம்பலுடைய மக்கட்கு என்றுமே இடமிருப்பதில்லை. அவர்களுக்குத் தேவைப்படுகின்ற எப் பொருளாயினும் அவர்கள் தேடியே ஆகவேண்டும், அதுவும் வழக்கமாக நெடுநேரம் தேடியாக வேண்டும். ஒரு பெரும் தொழிலை நிறுவுவதற்கோ சாதனையின் உச்சிகளை அறிந்து காணுவதற்கோ தேவைப்படுகின்ற அத்துணையளவு ஆற்றல், பொருள்களை நாடும் தேட்டம் உண்டு பண்ணுகின்ற எரிச்சல், இழிவான உள்ளநிலை, ஏமாற்றம் இவற்றில் வீணாக்கப்படுகின்றது.

ஒழுக்கமுடைய மக்கள் தம் நேரம், ஆற்றல் இரண்டையுமே பேணிக் காக்கின்றனர். அவர்கள் எதையுமே இழப்பதில்லை. எனவே, எதையுமே தேடிக் கண்டுபிடிக்கத் தேவையுமில்லை. ஒவ்வொன்றும் அதற்குரிய இடத்திலேயே இருக்கின்றது. இருளிலாயினும், அதன் மீது உடனேயே கையை வைத்துவிடலாம். அவர்கள் அமைதி உடையோராகவும், ஆழ்ந்து ஆராய்பவராகவும் இருக்க நன்கு தகுதி பெற்றவரேயாவர். எனவே, எரிச்சல், மோசமான உள்ளநிலை, தம் சொந்த ஒழுங்கமைவு இன்மைக்காகப் பிறரைத் தூற்றுதல் ஆகியவற்றைக் காட்டிலும் மிகுந்த நலனுடைய எதிலேனும் தம் மனத்தின் ஆற்றல்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு துறவியின் புனிதமான போக்குகளைப் போன்று வாணிப உலகத்தின் துறைகள் அனைத்திலும் முறைப்பாட்டின் தேவைகள் அத்துணை கண்டிப்பானதும், துல்லியமானதுமாகும். ஒருவனின் செல்வச் செழிப்பு-