பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

ஜேம்ஸ் ஆலன்



மேலும், கணிதத்தின் வியப்பிற்குரிய செயற்பாடுகள் அனைத்தும் பத்து எண்களின் முறைப்பாடான பாகுபாட்டுத் திட்டத்திலிருந்தே தோன்றியுள்ளன. அதேபோன்று, திட்டஞ் செய்யப்பட்டுள்ள குறிக்கோளைச் சாதித்துவிடுகின்ற வகையில் ஆயிரக் கணக்கான உறுப்புகளும் ஒன்று சேர்ந்து இதமாகவும், ஏறத்தாழ ஓசையின்றியும் இயங்குகின்ற மிகவும் சிக்கலான இயத்திரப் பொறி, பொறியியல் விதிகள் சிலவற்றை முறைப்பாடாகக் கடைப்பிடிப்பதினின்றும் கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

சிக்கல் மிகுந்த ஒன்றை முறைப்பாடு எவ்வாறு சிக்கலறுக்கின்றது, கடினமானதை அது எவ்வாறு எளிதாக்குகின்றது. எல்லையில்லாத் தரத்தவான நுணுக்கங்களை அது எவ்வாறு ஓர் ஒழுங்கமைதியின் மையவிதியுடன் தொடர்புபடுத்தி, முழுமையான சீர்மையுடனும், குளறுபாடு ஒரு சிறிதும் இல்லாது நிலையிலும் கையாண்டு காரணங் காட்ட வழிவகுக்கின்றது என்பதையும் நாம் இங்குக் காணலாம்.

முறைப்பாடு, முன்னேற்றத்திற்கும், உலகிலுள்ள கோடிக்கணக்கான மக்களில் ஒவ்வொருவரும் தமக்கெனவோர் இடத்தை நாடி மாறுபட்ட குறிக்கோள்களும், விருப்பங்களும் கொண்டு போட்டியிடுகின்ற அதே வேளையில் அவர்களை நிறைவான ஒரே முழுமையில் ஒருசேரப் பிணைப்பதற்கும் அடியாதாரமாக இருக்கின்ற முறைகளில் ஒன்றாகும் என்பது உண்மையே.