பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 86




ஒரு மனிதன் தன்னுடைய வேலையைச் செய்யவருங்காலையில் தன் கருவிகளைக் காண முடியாமலோ தனது கணக்கில் இலக்கங்களைச் சமநிலைப்படுத்த முடியாமலோ தனது மேசையின் திறவுகோலைக் காணமுடியாமலோ தன் சிந்தனைகளுக்கு விடைகாண முடியாமலோ போய்விடின் அவன் தானே உண்டுபண்ணிக் கொண்ட துன்பங்களில் தத்தளிப்பவனாவான். அதே போது, ஒழுங்குமுறையான போக்குடைய அண்டை வீட்டுக்காரன் தன்னுரிமையுடனும், களிப்புடனும் வெற்றிகரமான சாதனையின் ஊக்கமூட்டும் உச்ச நிலைகளை அளந்து கொண்டிருப்பான்.

கவனமற்றதோ சிக்கலானதோ திறமை வாய்ந்த மனங்களின் மிகவும் அண்மைக் காலத்திய வளர்ச்சிகளுக்குப் பின் தங்கி நிற்ப்பதோவான வழிமுறையைக் கொண்டுள்ள வணிகனுடைய நல் வாய்ப்புகள் நலிவுற்றதாக இருப்பின், அவன் தன்னைத் தானே குறை கூறிக்கொள்ள வேண்டியதுதான். அதனோடு, மிகவும் உயரிய தனிப் பயிற்சியுடையதும், பயனிறுதியுடையதான வழிமுறைகளைத் தனது நிறுவனத்தில் கையாள வேண்டிய தேவையையும் அவன் அறிந்துகொள்ள வேண்டும். காலத்தையும் உழைப்பையும் குறைத்து முழுநிறைவு, முதிர் சிந்தனை காரிய வரைவு இவற்றைப் பெருக்க உதவுகின்ற ஒவ்வொன்றையும் ஒவ்வொரு புதுமையையும் கருத்தையும் கைக்கொள்ள வேண்டும்.

உயிரினம், வாணிபம், குணவியல்பு, நாடு, பேரரசு ஆகிய ஒவ்வொன்றும் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற சட்டம் முறைப்பாடேயாகும். உயிரணுவிற்கு உயிரணு, துறைக்குத்-