பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

ஜேம்ஸ் ஆலன்


அவன் பிரிந்துவிட வேண்டி முயன்ற நிறை வட்டத்தினின்றும் அடுத்தடுத்து வருந் துன்பங்களுடன் மனிதன் வல்லந்தமாகப் பின்னொதுக்கப் படுகின்றான்.

இயற்கைப் பொருள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு நாம் ஆராய்ந்தால் அதன் அடிப்படைப் படிமுறைகள் மன மண்டலத்திலேயும் இருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, ஒரு விதை முளைவிட்டு, வளர்ச்சியாகிய மலர் அலரும் செடியாக வளர்ந்து மறுபடியும் விதையாகிற முறையை எடுத்துக் கொள்வோம். இதுவும் ஒரு மனப் படிமுறையேயாகும். எண்ணங்கள் விதைகளே. அவை மனமென்னும் நிலத்தில் வீழ்ந்து முறைவிட்டு அவற்றின் முழுமையான நிலையை அடைவதுவரையில் வளர்ந்து அவற்றின் இயல்புக்கேற்ப நற்செயல்கள், தீச் செயல்கள், அறிவு சான்ற செயல்கள் மடைமை மிக்க செயல்களாக மறுபடியும் பிறர் மனங்களில் தூவப்படவேண்டிய எண்ண விதைகளாக முடிவு பெறுகின்றன. ஆசிரியர் விதை விதைப்பவர், ஆன்மீகச் சொல்லோ உழவர்; அதேபோது தமக்குத் தாமே கற்பித்துக் கொள்ளுபவர், தமது மனநிலத்தின் சிறந்த வேளாண்மைக்காரர், ஓர் எண்ணத்தின் வளர்ச்சி ஒரு செடியின் வளர்ச்சியை ஒத்ததேயாகும்; பருவக் காலத்திற்கேற்ப விதை தூவப்பட வேண்டும்; அது அறிவுச் செடியாகவும், மெய்யுணர்வு மலராகவும் தனது முழுவளர்ச்சியைப் பெறக் காலம் தேவைப் படுகின்றது.