பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 88


வகையும் படுத்திக் கொள்வானேயாயின், அம்மனிதனுடைய ஆற்றல்களின் வளர்ச்சிக்கோ, குணவியல்பின் நிறைவுக்கோ, அவனுடைய நிறுவனத்தின் செல்வாக்கிற்கோ அவனுடைய வாணிபத்தின் செழிப்பிற்கோ எல்லை கட்டவே இயலாது.

தாம் கூறுவதைக் காட்டிலும் தாம் செயல்படுவதில் நுட்பமுடனிருக்கப் பல மக்கள் முயற்சி மேற் கொள்கின்றனர்; ஆனால், இங்குக் கூடப் பலரைத் திறப்பாடற்றவராகவும், தகுதியற்றவராகவும் ஆக்கி, விடாமுயற்சியும் தாங்குகையும் வேண்டப்படுகின்ற எந்த உழைப்பிற்கும் அவர்களைத் தகுதியற்றவராக்கி விடுகின்ற நுட்பப் பிழை சாதாரணமேயாகும். தன்னுடையவோ தன் பணி முதல்வருடையவோ நேரத்தின் ஒரு பகுதியதை தன் தவறுகளைத் திருத்தும் முயற்சியில் வழக்கமாகச் செலவிடுகின்ற மனிதனோ தன் தவறுகளைத் திருத்தும் பொருட்டுப் பிறிதொருவன் பணிக்கமர்த்தப் படவேண்டிய நிலையிலுள்ளவனோ நடைமுறை உலகில் எப் பதவியையும் வகிக்கத் தக்கவனன்று. அவர்கள் ஆக்கம் படைத்தோரின் வரிசைகளின் நடுவே ஓரிடத்தைப் பெறுகின்ற வாய்ப்பு அதனினும் குறைவு.

தனது குறிப்பிட்ட வெற்றியை நோக்கிச் செல்லும் வழியில் சில தவறுகளேனும் செய்யாத மனிதன் என்றுமே வாழ்ந்ததில்லை. ஆனால், தன் தவறுகளைக் கண்டறிந்து அவற்றை விரைந்து நீக்கி, அவை சுட்டிக் காட்டப்படுகிறபோது மகிழ்ச்சியடைபவனே திறமை வாய்ந்தவன். நேர்மனச் சார்புடைய மனிதன். வழக்கமான, நிலையாக நீடிக்கும் நுட்பமின்மையே மறம். தன் தவறுகளைக்