பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

ஜேம்ஸ் ஆலன்


பயனுடையவனாய் இருப்பதைப் பொறுத்தே அளவிடப்படுகின்றது. செயற்படுவதைப் பொறுத்தே மனிதன் பயனுடையவனாகின்றான்; அவன் விரும்பிக் கடைப்பிடிக்கின்ற கோட்பாடுகளைக் கொண்டன்று.

தச்சன் நாற்காலியைப் படைக்கின்றான். கொத்தன் வீட்டைக் கட்டுகின்றான். கம்மியன் இயந்திரத்தைக் கண்டு பிடிக்கின்றான். அறிவுடையவன் குணவியல்பை உருவாக்குகின்றான். உழைப்பாளிகள், உருவாக்குபவர்கள், செயற்படுபவர்கள், இவர்களே புவியின் உரம் ஆவர்; சமயவாதிகளோ, கோட்பாட்டாளர்களோ, தருக்கவாதிகளோ அல்லர்.

அறிவாற்றல் கோட்பாடாகிய கானல் நீரினின்றும் மனிதன் திரும்பி எதையேனும் செயலாற்றத் தொடங்கட்டும். அதுவும் தன் வலிமை அனைத்தையும் கொண்டு செயலாற்றட்டும்; அதன் காரணமாக அவன் ஒரு தனிப்பட்ட அறிவைப் பெறுகின்றான். ஒரு தனிப்பட்ட ஆற்றல் கைவரப் பெறுகின்றான். தன் தோழர்களின் நடுவே தனக்கெனத் தனிப்பட்ட நிலையையும், ஆக்கத்தையும் அடைந்து விடுகின்றான்.

தொடர்புள்ள விளக்கங்கள் பலவற்றைப் புழங்கவும், அவற்றை இயக்கி ஒன்றாகப் பிணைக்கின்ற தனித்த நியதியுடன் சேர்த்து முழுமையாகப் புரிந்து கொள்ளவும் உதவுகின்ற மனப்பண்பே கவியாற்றலாகும். இது, உருவாக்கவும், கட்டிக்காகவும் ஆற்றலைத் தருகின்ற ஓர் ஆண்மைப் பண்பாகும். ஒரு பெரிய கவிதையினுடையவோ கதையினுடையவோ ஆசிரியர், தமது கதையுறுப்புகளையும்,