பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 92


நிகழ்ச்சிகளையும் ஒரு மையமான கதைத் திட்டத்துடன் தொடர்புபடுத்தி, பல கலவையானதும், நிலைபெறுவதுமான ஓர் இலக்கியப்பணியை உருவாக்குகின்றார். பகுத்துணர்வதும், தொகுத்துணர்வதுமான திறமை ஒரே மனிதனிடத்தில் ஒரு சேரப் பொருந்தியிருப்பதே கவியாற்றலாகும். தன் ஆழமான அடிநிலைகளில் விளக்கங்களின் ஓர் அணிவகுப்பையே அவற்றின் சரியான அமைப்பு முறையிலும் உண்மையான இயக்க வரிசையிலும் தன்னகத்தே கொண்டுள்ள மனமே, சிறப்புத் திறமையை அடைந்துவிட வில்லையெனினும் அதை அடுத்துள்ள மனமாகும். ஒவ்வொரு மனிதனும் சிறப்புத் திறமையுடையவானக் இருக்க முடியாது. அவ்வாறு இருக்க வேண்டுவதுமில்லை. ஆனால், தன் சிந்தனைகளிலும், வாணிபத்திலும் முறை உண்டு பண்ணுவதில் கவனமுடன் கருத்தூன்றுவதால் தனது மனத் திறமையை அவன் சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொள்ள முடியும். அவனுடைய நுண்ணறிவு ஆழ்ந்து படரும் போது, அவனுடைய ஆற்றல்கள் மிகுதியாவதுடன், ஆக்கமும் சிறப்படைகின்றது.

வாழ்வில் தான் முயலும் உழைப்பு எத்தகைமைத்தாயிருப்பினும் சரியே, ஆற்றல், சிக்கனம், சால்பு, முறை இவற்றில் தன்னை நிறைவுபடுத்திக் கொள்பவன் தன் வாழ்க்கையின் உழைப்பில் நிலை பேறு கொள்ளும் வெற்றியடைவான். முழு ஆற்றலுள்ளவன், தனது நேரத்தையும் பொருளையும் கவனமுடன் சிக்கனப்படுத்துபவன். தன் வலிமையை, நன்னடத்தையில் பெருக்குபவன். திசை மாறாத சால்பைக் கொண்-