பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

ஜேம்ஸ் ஆலன்


டொழுகுபவன், முதலில் தன் மனத்தை முறைப்படுத்துவதன் மூலம் தனது உழைப்பையும் முறைப்படுத்துபவன் தோல்வியடைதல் இயலாத காரியமாகும்.

அத்தகைய மனிதனின் முயற்சிகள் நேர்முறையில் செலுத்தப்படுகின்றன; அதுவும், அவை பயனுடையதாக, நன்மை பயப்பதாக இருக்கும் வகையில் ஒருமுகப்படுத்தப்பட்ட ஆற்றலால் செலுத்தப்படுகின்றன. இதற்கும் மேலாகத், தன் முனைப்பின்றியே மதிப்பையும், வெற்றியையும் கொணரும் ஓர் ஆண்மையும், தனித்தன்மையுடைய மேன்மையும் அவனை வந்தடைகின்றன. வலிவற்றவர்களின் நடுவே அத்தகையோன் வந்து தோன்றுதலே அவர்களுக்கு வலிமை ஊட்டும். “வாணிபத்தில் விடா முயற்சியுடனிருக்கும் மனிதனைப் பாருங்கள். அவன் அரசர்களுக்கெதிரே நிற்பானேயன்றி இழி மக்களின் முன்னிற்பதில்லை” என அத்தகையோன் ஒருவனைக் குறித்து ஸ்கிரிப்சர் கூறுகின்றார். அவன் இரப்பதோ, சுணுங்குவதோ, முறையிடுவதோ, பழிப்பதோ இல்லை. ஆனால், அத்துணைக் கீழ்நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாத வகையில் அத் துணைவலிமை, தூய்மை, நேர்மை உடையவனா யிருக்கின்றான். ஆகவே, தன் குணவியல்பின் மேன்மையிலும், செம்மையிலும் உயர்நிலையில் நின்று உலகிலும், மக்களின் மதிப்பீட்டிலும் ஓர் உயரிய இடத்தை வகிப்பவனாகின்றான். அவனுக்கு வெற்றி உறுதியானது; அவனுடைய ஆக்கம் நிலைபேறு கொள்ளும். “வாழ்கைப் போர்க்களத்தில் அவன் நிமிர்ந்து நிற்பானேயன்றி, வீழ்ச்சியடைவதில்லை”.