பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 94



இரக்கம்

மீதியுள்ள தூண்கள் ஆக்கமெனும் கோயிலின் நடுப்பகுதித் தூண்களாகம். அவையே அதற்கு மிகுதியான வலிமையும், உறுதியையும் அளிக்கின்றன. அதனோடு அதன் அழகு, பயன் இரண்டையும் பெருக்குகின்றன. அதனின் கவர்ச்சியை அவையே பெரிதும் அதிகரிக்கின்றன. ஏனெனில், அவை உயர்ந்த ஒழுக்க நெறித் துறையைச் சார்ந்தனவாக இருப்பதால் பேரழகையும், குணவியல்பு மேம்பாட்டையும் சார்ந்தன வாகவும் இருக்கின்றன.

விலைவில் அழிந்து விதையோ கனியோ விட்டுச் செல்லாத வேரற்ற ஓர் அழகான மலரையொத்து, எளிதில் கண்ணீர் சிந்துவதும், மேலெழுந்தவாரியாக உள்ள மெய்ப்பாட்டை இரக்கமெனத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நண்பனொருவனைப் பிரியும் போதோ, வெளியிலுள்ள ஏதேனும் துன்பத்தைச் செவியுறுகின்ற போதோ நரம்புத்தளர்ச்சி கொண்டாற்போல் அழுதல் இரக்கமாகாது. பிறருடைய கொடுமைகளுக்கும், நீதி இன்மைகளுக்கும் எதிராகத் தோன்றுகின்ற முரட்டுச் சீற்றமும் இரக்க மனத்தின் எடுத்துக் காட்டாகிவிடாது. ஒருவன் தன் மனைவியைத் துன்புறுத்தவோ தன் குழந்தைகளை அடிக்கவோ தன் பணியாள்களைப்