பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

ஜேம்ஸ் ஆலன்


பழிக்கவோ வெறுத்து ஏளனமாய்ச் சொல்லம்புகளால் தன் அண்டை அயலாரைப் புண்படுத்தவோ செய்பவன், வீட்டில் கொடுமைக்காரனாக இருப்பவன், அல்லல்படும் மக்களிடம் காட்டும் அன்பு எத்துணை வஞ்சகமானதாக விருக்கும்? அவனை அடுத்துள்ள உலகில் காணக்கிடக்கும் நீதியின்மைக்கும், கல் நெஞ்சத்திற்கம் எதிராகத் தோன்றுகின்ற சீற்றங்கள் எத்துணை ஆழமற்ற மெய்ப்பாட்டை அறிவுறுத்துகின்றன.

அத்தகையோரை எமர்சன் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார் : “போ. உன் குழந்தையிடம் அன்பு செலுத்து. உன் விறகு வெட்டியிடம் அன்பு செலுத்து. நல்லியல்பு கொண்டவனாக, அடக்க முள்ளவனாக இரு. அந்த மேம்பாட்டைக் கொண்டிரு. உனது கடினமான, ஈவிரக்கப் பேராசையை ஆயிரம் மைல்களுக்கப்பாலுள்ள கருப்பு நிற மக்கள் மீது காட்டுவதான நம்ப முடியாத பரிவால் என்றுமே மெருகு பூசாதே. தொலைவிலுள்ளோாக்கு நீ காட்டும் அன்பு வீட்டோர்க்குப் பகையாகம்.”

ஒருவனின் உரைகல் அவனுடைய உடனடியான செயல்களிலே இருப்பதன்றி அவனுடைய முனைப்பாடான மெய்ப்பாடுகளில் இருப்பதன்று. அச் செயல்கள் இடைவிடாது தன்னலமும், பகைமையும், கொண்டதாகக் கூறப்படின், அதாவது வீட்டிலுள்ளோர் அவனுடைய காலடியோசையைக் கேட்டதும் அஞ்சிக் கலங்கவும், அவன் நீங்கியதும் மகிழ்ச்சி தரும் விட்டாற்றியாகக் கருதவுமான நிலையிருப்பின், துன்பப்படுவோர்க்கும், தாழ்த்தப்படுவோர்க்கும் அவன் கூறும் இரக்கச் சொற்கள் எத்துணை பொய்மையானது!