பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

இறுதி முறையாக உதயணனை நெருங்கித் துன்புறுத்தலாயினர். அதைக் கண்ட இடவகன் படையினர், விரைவில் வந்து வேடர்களை வில்லும் வாளும் வேலும் கொண்டு எதிர்த்தனர். இது உதயணனக்கு ஏற்படுத்திய நிலை, இருதலைக் கொள்ளி போல இருந்தது. இப் புறம் வேடர்கள் துயரம் பொறுக்க முடியவில்லை. வந்திருக்கும் படையினர் தனக்கு வேண்டியவர்கள் என்று தெரிந்துவிட்டால், போகின்ற போக்கில் சினந்தீர ஏதாவது செய்துவிட வேடர்கள் தயங்க மாட்டார்கள். இதற்காக வந்திருப்பவர் எவரென்பதையே அறிந்து கொள்ளாதவன்போல உதயணன் நடிக்க நேர்ந்தது. “வந்திருக்கின்ற படையினர் உங்களைச் சேர்ந்தவர்களா? பிறரா? இவர்களால் நமக்கு ஏதேனும் துன்பம் நேருமாயின் எங்களை இங்கே எங்காவது மறைந்திருக்கச் செய்யுங்கள்” என்று வேடர்களை நோக்கிக் கூறி ஏமாற்றினான் உதயணன்.

அதற்கு வேடர்கள் “இது உதயணனின் மந்திரிகளாகிய இடவகன் படை. உயிர்தப்ப விரும்பினாயாயின் எங்களோடு ஓடிவருக” என்று மறுமொழி கூறிவிட்டுத் தாங்கள் தப்ப வழிதேடி, விரும்பிய திசைகளில் ஒடலாயினர். சிலர் புற்புதர்களில் ஒளிந்து ஓடினர். பதுக்கைக் கற்களின் இடையிலே பதுங்கியவாறு விரைந்தனர் வேறு சிலர். எஞ்சியவர்களில் இடவகன் படைவீரருடைய வாளுக்கு இரையாயினர் சிலர். படைவீரர் வியக்க, வேட்டுவப் போர்த்திறங் காட்டிப் போரிட்டனர் சிலர். வயந்தகனும் இடவகனும் கூடப் போரில் ஈடுபட்டிருந்தனர் போலும். வேட்டுவர்களில் பெரும்பாலோர் ஓடி விட்டார்களேனும், எஞ்சியவராய் நின்று போரிட்ட சிலருக்கே இடவகன் படை வீரர்கள் முற்றிலும் முயன்று விடைகூற வேண்டியிருந்தது. இந் நிலையில் உதயணன், தத்தை, காஞ்சனை இவர்களுடனே சிறிது விலகி ஒதுக்குப் புறமாக ஓரிடத்தில் மறைந்திருக்க விரும்பினான். அதற்கு வேறோர் காரணமும் இருந்தது. தானும் தத்தை, காஞ்சனை இவர்களும் இருந்த இடம் இரண்டு தரத்துப் படையினருக்கும் இடையில் அமைந்