பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துயர வெள்ளம்

141

யிருந்தது. அவனுடைய துயரம் சமாதானப் படுத்த இயலாத மிகப்பெரிய துயரமாயிருந்தது.

“நண்பனே! துன்பப் பொறை சுமக்கலாற்றாது நீ இங்ஙனம் தீப்புகுதல் உன் பகைவர் மகிழ்ச்சி அடைவதற்குரிய செயலாகும். அன்றியும், 'யூகியை இழந்தபின் வத்தவ குமரன் தனக்கெனச் சொந்த ஆற்றல் இல்லாது போயினமையால், தத்தையின் பிரிவுத் துயரை வாயிலாகக் கொண்டு கோழையாக மாறித் தானே இறந்து போனான்' - என்று பிறர் உன்னை இகழவும் இடந்தரும் இச் செயல், ஏற்கெனவே, ‘யூகி இறந்தபின் நீ ஏதும் செய்ய இயலாதவன் ஆயினை!’ என்று உன் பகைவர் எள்ளி நகையாடி உரைத்து வருகின்றனர். ஆகவே கலங்காமல் இரு” எனக் கூறி நண்பர் அவனைத் தீப்புகாமல் தடுத்து நிறுத்தினர். உதயணன் நலத்திற்காக நடிக்கப்பட்ட ஒரு போலி நாடகத்தை அவன் நம்பித் திருந்தவே, நண்பர்கள் இந்த ஏற்பாடு செய்திருந்தனர்.

புற்றிலிருக்கும் பாம்பை வெளியேற்றிச் சினமூட்டுவதற்காகப் புற்றின் வாயிலில் இட்ட நெருப்பைக் கண்டு, பாம்பு வெளியே போந்ததுமன்றிச் சிலரைத் தீண்டவும் தலைப்பட்டுவிட்டதுபோல உதயணன் அதை நம்பியதோடன்றித் தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளமுற்பட்டு விட்டது கண்டு அவர்கள் திடுக்கிட்டனர். முதலுக்கே மோசம் வந்துவிடும் போலிருந்தது. எவர் வேடிக்கை பார்க்கப் பாம்பை உள்ளேயிருந்து நெருப்பிட்டு வெளியேற்றினாரோ அவரையே அது கடித்துவிட்டால் என் செய்வது? அரிதின் முயன்று நிலை கொள்ளாமல் தடுமாறி உழன்று சுழலும் உதயணனைத் தேற்றினர் அவனுடைய தோழர்கள். காரிய நாடகத்தை அவன் மெய்யென நம்பியது அவர்களுக்கு மகிழ்ச்சியே தந்தது.

எல்லையற்ற நீர்ப்பெரும் பரப்பை உடையதாக இருந்தாலும் கடலுக்கும் கரை உண்டல்லவா? அதைக் கடந்து அது அப்பால் போய்விட முடியாதே? தன் தோழர்களின் சொல்லைக் கடந்தறியாத உதயணன் ஒருவாறு மனந்தேறித்