பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கூறி அது மெய்யே என்று உறுதியாகச் சொன்னான். அதைச் செவியுற்ற அளவில், “அப்படியானால் இப்பொழுதே அங்கே புறப்படுவோம்” என்று உதயணன் கூறவும் நண்பர் மகிழ்ந்தனர். உதயணன் மகதயாத்திரை போவதற்குரிய ஏற்பாடு உறுதியாயிற்று. இசைச்சன் கூற்றில் உதயணன் கொண்ட நம்பிக்கையே இதற்குக் காரணம், வாசவதத்தையையும் யூகியையும் உதயணன் உயிரோடு காணவிரும்பிய தவிப்பும் ஒரு காரணம்.

ஏற்பாட்டின்படி உதயணனோடு மகதநாட்டுக்குப் புறப்படுவதற்கு ஆற்றலிற் சிறந்த வீரர் நூற்றுவர் முன்வந்தனர். அவர்கள் வேற்றவர் போல அந்தணராக மாறுவேடம் பூண்டு புறப்பட வேண்டுமென்பது திட்டம். நூறு வீரரும் ஏற்ற தோற்றங்களுடன் தனித்தனியே முன்னும் பின்னுமாகத் தொடர உதயணன், நண்பர் ஆகியோர் அந்தணர்களுக்குரிய தூய உருக்கொண்டு மகதநாடு சென்றனர். இடையில் புன்னாளகம் என்னும் நாட்டையும், காள வனத்தையும் கடந்து கருப்பாசயம் என்ற காட்டாற்றையும் தெப்பங்களைக் கொண்டு கடந்து மேற்போயினர். அதற்கு அப்பால் ஆறுகளும் சாலைகளும் இடையிடையே உள்ள ஒரு நீண்ட காட்டில் அவர்கள் நடந்து சென்றனர். இவ் வழியில் உதயணன் பல காட்சிகளைக் கண்டான். அவன் கண்ட ஒவ்வோர் காட்சியும் அவனுக்குத் தத்தையின் நினைவையும் யூகியின் நினைவையும் அதையொட்டிய துயரத்தையுமே உண்டாக்கின.

31. இராசகிரிய நகரம்

.ன்பச்சூழ்நிலையாக இயற்கை காட்டும் எழிற் காட்சிகளைத் துன்பத்தில் ஆழ்ந்து போனவன் கண்டால் அவை அவனுக்குத் துன்பத்தையே மிகுதியாகக் கொடுக்கும். அந்த நிலையில்தான் உதயணன் அப்போது இருந்தான். காண நேர்ந்த காட்சிகள் எல்லாம் அவனைப் பித்தனாக்கி விட்டன. ஏதோ வாய்க்கு வந்ததையெல்லாம் அரற்றிக்கொண்டு