பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காதலன் கலைநலம்

205

முறுக்கிக் சுட்டிக் கொடுத்தருளல் வேண்டும்” என்று அவனிடம் கூறினாள்.

ஏதோ கவனத்தில் வேறு சிந்தனையில் இலயித்துப் போயிருந்த உதயணன் செவிகளில் அவள்கூறிய வார்த்தைகள் சரியாக விழவில்லை அவள் தனக்கு முன்பு யாழை வைத்திருக்கக் கண்டு வழக்கப்படி தன்னை வாசிக்கச் சொல்லி வேண்டுகிறாள் போலும் என்று எண்ணிக்கொண்டு, “இந்த யாழ் வித்தையோடு எந்த வழியிலும் தொடர்பு இல்லாதது எங்கள் அந்தணர் மரபு. என்னை இப்படி வாசிக்கச் சொல்லி வற்புறுத்தி வருத்துவதைப் பார்த்தால் இனிமேல் யாழ் கற்றுக்கொண்டு விடலாமா என்றெண்ணுகிறேன் யான்?” என்று சற்றே உரத்த குரலில் அவளுக்கு உதயணன் விடை கூறினான். அதைக் கேட்ட பதுமை சிரித்த வண்ணம், “அந்தணர் பெரும! நீ இதனை வாசிக்கவோ அதற்காக வலிய முயன்று கற்கவோ வேண்டாம்! இதிலுள்ள நரம்புகள் தளர்ந்ததனால் இது இனிமை குன்றிப் போயிற்று. சற்றே நரம்புகளை இறுக்கி ஒன்று சேர்த்துக் கொடுத்தால் போதும்” என்று பதுமை திரும்பவும் சாதுரியமாகக் கூறினாள். சூழ்ச்சிகளிலும் பிறர் மன இயல்பை நுட்பமாக ஆராய்ந்து உணர்வதிலும் தேர்ந்தவனாகிய உதயணன், இந்த இடத்தில் தன்னை மறந்து பரவச நிலையோடு, பதுமையின் தந்திரப் பொறியில் மாட்டிக் கொண்டான். -

யாப்பியாயினிக்குக் கூறிய விடையளவில் தான் அவனுடைய நடிப்புப் பயன்பட்டது. யாழ்க் கலையில் பயின்று பழகிப் பழுத்த அவன் கைகள் அவனையும் அவன் நடிப்பையும் மறந்து தாமாகவே மீறிவிட்டன. நரம்புகளை இறுக்கிக் கொடுக்குமாறு பதுமையின் தோழி கேட்டபோது, ‘நான் யாழோடு சற்றும் பழக்கம் இல்லாத அந்தணர்குலத்திற் பிறந்தவன்’ எனத் தான் கூறியதற்கு ஏற்பப் பேசாமல் இருக்க வேண்டும் உதயணன். ‘பாடத் தெரியாது’ என்றவன் கூறியவுடன் சற்றைக்கெல்லாம் அதை மறந்து நரம்பைத் திருத்திக் கொடுக்கச் சம்மதித்தால் அது எப்படி இருக்கும்? ‘யாழோடு