பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவேறிய நோக்கம்

333

களால் உடம்பைப் போர்த்திய பசுக்கள் பலவற்றைத் தானமாக வழங்கினான். அந்தணர்கள் ஏழேழு முறை அப்பரிசில்களைப் பெற்றனர்.

வாசவதத்தையைத் தன் பள்ளியறையில் தான் உண்மையாகவே கண்டிருப்பினும், வயந்தகன் கூறியவற்றாலும், உறங்கி விழித்ததும் அவளைக் காணாமையாலும், படிப்படியான சிந்தனைக்குப்பின் அது கனவாகத்தான் இருக்கும் என்ற முடிவிற்கே உதயணனும் வந்து சேர்ந்துவிட்டிருந்தான். தத்தையையே எண்ணி அவள்மேல் வேட்கை யுற்றிருந்த தன் மனநிலைக்கு ஏற்ப அவள் கண்முன் தெரிந்ததுபோலவும், பக்கத்திலமர்ந்து கோடபதியை வாசித்தது போலவும் தனக்குத் தோன்றியவை எல்லாம் ‘வெறும் பிரமை! ஆசையின் விளைவு!’ என்ற முடிவிற்கு வந்தான். ‘வேட்கையும் ஆசையும் உடைய எவருக்கும் இவ்வியல்பு இருக்கும் போலும்’ என்று தன் மனத்தையும் சமாதானப்படுத்திக் கொண்டுவிட்டான் அவன்.

உதயணன் நம்பிக்கை இழந்து மனந்தளர்ந்த இதே சந்தர்ப்பத்தில், வயந்தகன் மீண்டும் அவனைக் கண்டு அருமையான யோசனை ஒன்றைக் கூறினான். “முன்பு நாம் மகதநாடு சென்றிருந்தபோது இராசகிரிய நகரத்தில் சந்தித்தோமே ஓர் முனிவர், அவர் இப்போது இங்கே கோசாம்பி நகரத்திற்கு வந்து நகர்ப்புறத்திலுள்ள மதுகாம்பீர வனமெனும் சோலையில் தங்கியிருக்கிறார். வாசவதத்தை சென்றிருக்கும் இடம் ஏதுவாயினும் மந்திர வன்மையால் அவர் மீட்டுக் கொடுப்பார். நாம் இருவரும் சென்று இன்று அவரைச் சந்தித்தால், ஏதாவது நலம் விளையும் என்று கருதுகிறேன்” என வயந்தகன் கூறவும், முழு மனத்தோடு மதுகாம்பீர வனம் சென்று அவரைச் சந்திக்கச் சம்மதித்தான் உதயணன். உண்மையாகவே மதுகாம்பீர வனத்தில் அப்போது யார் வந்து தங்கியிருக்கின்றார்கள் என்பதை உதயணனிடம் கூற விரும்பாதவனல்லன் வயந்தகன்! ஆயினும் ‘அவனே நேரில் வந்து கண்டு திகைக்கவும்