பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நருமதையின் மறுப்பு

33

என்றால் அது உன் நல்வினைப் பயனே ஆகும். இதோ உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும் இவருடன் (வயந்தகன்) உதயணன்பாற் சென்று சேர்ந்து அவன் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக!” - என்று நற்றாய் நருமதையை நோக்கிக் கூறினாள். நருமதையின் முகம் சிவந்தது. புருவங்கள் நெரிந்தன. கண்கள் செவிகள் வரை நீண்டு அளவு செய்துவிட்டு மீண்டன. முன்னே வைக்கப்பட்டிருந்த பொன் மாசைகளைத் தன் சினத்தில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் அவள் தாறுமாறாக எடுத்துச் சிதறினாள். வயந்தகனும் தன் தாயும் கேட்கும் படியாகக் கொடிய மொழிகளால் மறுப்பைக் கூறத் தொடங்கினாள். “சிறைப்பட்டுக் கைதியாக எங்கள் நாட்டுக்கு வந்த அந்தக் குறுநில மன்னனை, அவன் வீடு தேடிச் சென்று விரும்பியதைச் செய்து நான் மகிழ்ச்சியூட்டுவேன் என்று நினைப்பதுகூட முடியாது. இதற்கு ஒரு பொழுதும் சம்மதிக்கவே மாட்டேன்” என்று தன் குலத்திற்குச் சிறிதும் பொருந்தாத மொழிகளைக் கூறத் தொடங்கி இகழ்ந்தாள்.

நருமதையின் தாய் எவ்வளவோ சொல்லியும் அவள் கண்டிப்பாக மறுத்து விட்டாள். நருமதையின் தாயப்பெண்டிர் அவளுக்குப் பலவகைக் காரணங்களை எடுத்துக் காட்டி உதயணனை மறுப்பது சரியல்ல என்பதைக் கூறினர். “தவ வினை நன்றான காலத்துத் திருமகள் கூடுமாறு போலப் பொருள் கிடைத்த விடத்துக் கூடியும், தவ வினை தீதாகி நல்வினை நீங்கிய காலத்துத் திருமகள் நீங்குமாறுபோல் பொருள் இல்லாவிடத்து நீங்கியும் இட்டதையுண்ணும் நிலம் போல நம்மைச் சேர்ந்தோர் பொருளையுண்டும் அவர் வயமாய் ஒழுக வேண்டிய நமக்கு மறுத்தல் வெறுத்தல் முதலியவை தகாதன” என்று பலவிதமாகக் கூறியும் நருமதை வயந்தகனுடன் போக மறுத்தாள். நருமதையின் தாய்க்கு இது அளவு கடந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. வயந்தகனை நோக்கி, “நருமதையை நினது அடிமைபோலக் கருதி வலிதில் தேர்மிசைக் கொண்டு உதயணனிடம் செல்க. அவள்

வெ.மு - 3