பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பிறவியெடுத்து வாழ்ந்து வருகின்றாள். அவள் உனக்கு ஏதாவது ஒர் பெரிய உதவியைச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாளாகையினால் வாசவதத்தையின் இந்த ஆசையை நீ அவளைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்ளலாம். பத்திராபதி முன் பிறவியில் யார் என்பது உனக்கு இன்னும் விளங்கியிருக்காது. அவள் பத்திராபதியாகப் பிறந்ததே ஒரு சாபத்தினால்தான். அந்த வரலாற்றை இப்போது நான் உனக்குக் கூறுகின்றேன்; கேட்பாயாக!

முன்பொரு காலத்தில் விந்தியமலைக்கு அருகிலுள்ள நருமதையாற்றின் கரையில் பருப்பதம் என்ற மலையில் குபேரன் தன் உரிமை மகளிர் சிலருடனே தங்கியிருந்தான். குபேரனுக்கு உரிய தெய்வ மகளிர் பத்திரை முதலிய ஒன்பது பேர்கள். அவர்களில் ஒருத்தியாகிய பத்திராபதி என்பவளை அழைத்து, அருகிலுள்ள சோலைக்குச் சென்று மலர் தளிர் முதலியன கொய்து கொண்டு வருமாறு குபேரன் அனுப்பினான். சோலைக்கு மலர் கொய்வதற்குச் சென்ற பத்திராபதி அங்கே ஒரிடத்தில் ஒர் ஆண் யானையும் பெண் யானையும் களிப்புடனே கூடிய நிலையில் இருந்ததைக் கண்டு மனோ விகாரமுற்று விரகதாபம் கொண்டாள். அந்த நிலையில் அவள் தன் செயலை மறந்ததைக் கண்டு குபேரன், ஆற்ற முடியாத சினத்தினால் மண்ணுலகிற் சென்று பெண் யானையாகப் பிறக்குமாறு அவளுக்குச் சாபம் அளித்து விட்டான். பத்திராபதி அஞ்சி நடுநடுங்கியவளாய்க் கலங்கிய உள்ளத்தோடு ‘எனக்கு எப்போது இச் சாபத்திலிருந்து விடுதலை?’ என்று குபேரனை வினவினாள். ‘உன்னைப் பிரச்சோதன மன்னன் பத்திராபதி என்ற இதே பெயருக்குரிய யானையாக வளர்த்து உதயணனுக்கு அளிப்பான். உதயணன் வாசவதத்தையோடு உஞ்சை நகரிலிருந்து தப்பி ஓடும்போது இருளில் பெருந்தொலைவு சென்றபின் காலகூடம் என்ற கடுநோயால் நீ இறந்து வீழ்வாய். அப்போது இறந்து வீழ்ந்த உன்காதுகளில், உதயணன் பஞ்ச மந்திரத்தை உபதேசிப்பான். அதன்பின் நீ பழைய தெய்வ கன்னிகை பத்திராபதியாக