பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

காஞ்சனமாலையின் வினாவுக்கு ஏற்ற விடை கூறித் தேற்றினான் உதயணன். “அரசன் தத்தையைக் காக்குமாறு என்னைப் பணித்த செய்தியை அறியாது இந்த வீரர்கள் சந்தேகமுற்றுப் போருக்கு வருகின்றனர். அவர்களை வென்று மெற்செல்லுதல் எனக்கு அரிய வினையன்று. எனவே நீங்கள் இருவரும் சிறிதும் அஞ்சல் வேண்டா” என்றான் உதயணன். இவ்வாறு கூறிய மொழிகளைக் காஞ்சனை தத்தைக்கு ஆயத்தைச் சேர்ந்த கொட்டந்தாங்கிய பணிப்பெண்கள், அடைப்பை மகளிர், சுவரிமகளிர், பணிசெய்கூனர், தோழியர், செவிலியத் தாயர், சஞ்சுகிமுதியர் முதலியார் யாது செய்வதென்றறியாது அலமரல் எய்திப் புலம்பினர். நீராட வந்த மக்கள் கூட்டம் துயராடித் துன்பத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தது. இஃது இவ்வாறு இருக்க உதயணனிடம் ஓலை பெற்றுச் சென்ற சாங்கியத் தாய் பெரிய படைப் பரப்பின் நடுவே மாறு வேடத்துடன் திரிகின்ற யூகியை அவன் உடல் அடையாளங்களாற் கண்டு அறிந்தாள். தன்னை அறிந்து நிற்கும் சங்கியத் தாயைக் கூர்ந்து நோக்கிய யூகி உதயணன் கூறியிருந்த விவரங்களைப் பற்றி முடிவு செய்வதற்காக அருகின் இருந்த ஒருகுயவன் மனையில் மறைந்து இருவரும் ஆலோசித்தனர். ஆலோசனை முடிந்தபின் மீண்டும் தாம் சந்திக்கும் காலத்தை ஒருவருக்கொருவர் அறிவித்துக் கொண்டு பிரிந்து சென்றனர்.


14. சினமும் சிந்தனையும்

தத்தையை உதயணன் தன் நாடு நோக்கிப் பிடிமேல் கொண்டு செல்வதை அறிந்தும் அதைப் பிரச்சோதனனிடம் கூற அஞ்சினர், காவல்வீரர். காவல்வீரர் பலரும் இவ்வாறு அஞ்சி என் செய்வதென்று அறியாமல் திகைத்திருந்தபோது வில்லும் அம்பும் உதயணனிடம் பறிகொடுத்துவிட்டு அவனிடமிருந்து மன்னனுக்குச் செய்தி கேட்டு வந்த வராகன்